லக்னோவில் சென்று கொண்டு இருக்கும் கார் மீது ரொமான்ஸ் செய்யும் காதல் ஜோடி; வைரல் வீடியோ!!
சமீபத்தில்தான் இருசக்கர வாகனத்தில் ஒரு காதல் ஜோடியின் ரொமான்ஸ் வீடியோ வைரலாகி வந்தது. இந்த வீடியோ வைரலாகி முடிவதற்குள் லக்னோவில் இருந்து வேறொரு காதல் ஜோடியின் வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடக தளங்களில் அதிகமாக பகிரப்பட்டும் வருகிறது. காரின் மேல் அமர்ந்து ரொமான்ஸ் செய்வது போன்று அந்த வீடியோ பதிவாகியுள்ளது.
இந்த வைரல் வீடியோவை பிரியா சிங் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பைக்குகளை பின் தொடர்ந்து செல்லும் காரில் 'திறந்த காதல்' என்று ஹிந்தியில் பதிவிட்டுள்ளனர். மேலும், லக்னோவில் சாலை நிலைமையைப் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், ஹூண்டாய் வெர்னா போன்று சென்று கொண்டு இருக்கும் செடானில் இருந்து ஒரு காதல் ஜோடி, சன்ரூப் வழியாக காருக்கு மேலே வருகின்றனர். வாகனம் சென்று கொண்டிருக்கும்போது ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்கின்றனர். கால்களை காருக்கு வெளியே தொங்கவிட்டு ஆபத்தை ஏற்படுத்துவதைப் போல் அமர்ந்து செல்கின்றனர்.
இதையும் படிங்க..பிரபல யூடியூபர் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த சப்ஸ்க்ரைபர்.. ஹோம் டூரால் வந்த வினை !!
ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்கின்றனர். அவர்கள் செல்வது முக்கிய சாலை என்பது வீடியோ மூலம் தெரிகிறது. ஆனால், அவர்கள் மீது டிராபிக் போலீசார் நடவடிக்கை எடுத்தார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வீடியோ இணையத்தில் பகிரப்பட்டதில் இருந்து, அதிகளவில் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் காதலர்களுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க..ஆளுநர் பதவியே வேண்டாம்.. மகாராஷ்டிரா ஆளுநர் அதிரடி ராஜினாமா - யார் இந்த பகத்சிங் கோஷ்யாரி ?
இதுபோன்ற செயலைச் செய்வது வேடிக்கையானது அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஒருவர் பதிவு செய்துள்ளார். இப்படி செல்வது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
இளைஞர்கள் தற்போது தங்கள் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள் என்று மேலும் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், உபி காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தை இணைத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க..Viral: நடுரோட்டில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி.. அதுவும் திருட்டு பைக் வேற! இதெல்லாம் நமக்கு தேவையா கோபி !!