MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இன்றே கடைசி நாள்.. வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. மறக்காம நோட் பண்ணுங்க

இன்றே கடைசி நாள்.. வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. மறக்காம நோட் பண்ணுங்க

2025-26 நிதியாண்டுக்கான அட்வான்ஸ் டாக்ஸின் இறுதி தவணை செலுத்த கடைசி தேதி மார்ச் 15, 2026. கடைசி தேதிக்குள் செலுத்த தவறினால், அபராதம் இல்லை என்றாலும் வருமானவரி சட்டப்படி வட்டி விதிக்கப்படும்.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 15 2026, 01:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மார்ச் 15 முன்பண வரி
Image Credit : freepik

மார்ச் 15 முன்பண வரி

2025–26 நிதியாண்டுக்கான அட்வான்ஸ் டாக்ஸின் (முன்கூட்டிய வரி) நான்காவது மற்றும் இறுதி தவணை செலுத்த வேண்டிய கடைசி தேதி மார்ச் 15, 2026, அதாவது இன்று. இந்த ஆண்டு அந்த தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், வரி செலுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று வரி நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், வருமானவரித் துறையின் ஆன்லைன் போர்டல் 24 மணி நேரமும் அவர் கொண்டிருப்பதால், வரி செலுத்துபவர்கள் எப்போது வேண்டுமானாலும் இணையதளத்தில் மூலம் பணத்தை செலுத்த முடியும். அதனால் கடைசி நாளில் கூட ஆன்லைன் முறையில் முன்கூட்டியே வரி செலுத்தலாம்.

24
அட்வான்ஸ் டாக்ஸ்
Image Credit : Getty

அட்வான்ஸ் டாக்ஸ்

இந்த அட்வான்ஸ் டாக்ஸ் என்பது, ஒரு நிதியாண்டில் கிடைக்கும் வருமானத்திற்கான வரியை முழுவதுமாக வருட இறுதியில் செலுத்துவதற்கு பதிலாக, ஆண்டின் போதே தவணைகளாக செலுத்தும் முறை ஆகும். குறிப்பாக TDS, TCS போன்ற கழிவுகளுக்குப் பிறகு ஒருவரின் மொத்த வரி ரூ.10,000 அல்லது அதற்கு மேல் இருந்தால் இந்த முன்கூட்டிய வரி கட்டாயமாகும். பலர் இதை தொழில்முனைவோர் அல்லது வியாபாரிகளுக்கே பொருந்தும் என்று நினைத்தாலும், கூடுதல் வருமானம் உள்ள சம்பளத்தார்களுக்கும் இது பொருந்தும்.

Related Articles

Related image1
தங்கம் இப்போ வாங்கலனா எப்போதும் வாங்க முடியாது! ஒரே நாளில் சரிந்த விலை! கடைகளில் குவியும் கூட்டம்!
Related image2
கச்சா எண்ணையில் இருந்து பெட்ரோல், டீசல், எரிவாயு எல்லாம் எப்படி எடுக்கப்படுகிறது? எத்தனை பொருட்கள் கிடைக்கும் தெரியுமா?
34
அட்வான்ஸ் வரி கடைசி தேதி
Image Credit : our own

அட்வான்ஸ் வரி கடைசி தேதி

உதாரணமாக, சம்பளத்திற்கு மேலாக வீட்டு வாடகை வருமானம், வட்டி வருமானம், முதலீட்டு லாபம் போன்ற கூடுதல் வருமானங்கள் இருந்தால், அந்த வருமானம் வரியை கணக்கிட்டு முற்பண வரி ஆக செலுத்த வேண்டி இருக்கலாம். குறிப்பாக ஃப்ரீலான்சர்ஸ், ஆலோசகர்கள் மற்றும் வல்லுநர்கள் அவர்களுக்கு மார்ச் 15 மிகவும் முக்கியமான தேதி. ஏனெனில் பெரும்பாலும் அவர்களின் முழு வரி தொகையும் இந்த இறுதி தவணையிலேயே செலுத்தப்பட வேண்டும்.

44
முன்கூட்டியே வரி ஆன்லைன் கட்டுதல்
Image Credit : our own

முன்கூட்டியே வரி ஆன்லைன் கட்டுதல்

ஆனால் எல்லோருக்கும் முன்கூட்டியே வரி கட்டாயம் இல்லை. தொழில் அல்லது வியாபார வருமானம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு முன்கூட்டியே வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் போது வரியை செலுத்தலாம். இருப்பினும் கடைசி தேதிக்குள் முன்கூட்டியே வரி செலுத்தப்படவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படாது; ஆனால் வருமானவரி சட்டத்தின் 234B மற்றும் 234C பிரிவுகளின் கீழ் வட்டி விதிக்கப்படலாம். எனவே நிதியாண்டு முடிவதற்கு முன் வருமான விவரங்களை சரிபார்த்து சரியான தொகையை செலுத்துவது நல்லது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வரி
வருமான வரி
Latest Videos
Recommended Stories
Recommended image1
வேலைக்கே போக வேண்டாம்.. மாசம் ₹9,250 கன்ஃபார்ம்..! Bank-ஐ விட பெஸ்ட்.. Risk-ஏ இல்லாத வருமானம்..!
Recommended image2
துவரம் பருப்பு முதல் பொட்டு கடலை வரை.. கம்மி விலையில் மளிகை பொருட்கள்.. சேலத்தில் குவியும் மக்கள்
Recommended image3
Coconut Shell Business: தேங்காய் சிரட்டையில இப்படி ஒரு பிசினஸ் இருக்கா? மாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!
Related Stories
Recommended image1
தங்கம் இப்போ வாங்கலனா எப்போதும் வாங்க முடியாது! ஒரே நாளில் சரிந்த விலை! கடைகளில் குவியும் கூட்டம்!
Recommended image2
கச்சா எண்ணையில் இருந்து பெட்ரோல், டீசல், எரிவாயு எல்லாம் எப்படி எடுக்கப்படுகிறது? எத்தனை பொருட்கள் கிடைக்கும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved