MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஒரே வீட்டில் இனி இரண்டு கேஸ் கனெக்ஷன் கிடையாது.. சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்.. முழு விபரம் உள்ளே!

ஒரே வீட்டில் இனி இரண்டு கேஸ் கனெக்ஷன் கிடையாது.. சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்.. முழு விபரம் உள்ளே!

உங்கள் வீட்டில் பைப்லைன் கேஸ் (PNG) இணைப்பு இருக்கிறதா? அப்படியானால் இனி நீங்கள் LPG சிலிண்டர் பயன்படுத்த முடியாது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த புதிய விதிகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Mar 15 2026, 09:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு
Image Credit : ChatGPT

கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு

மேற்கு ஆசிய நாடுகளில் நடந்து வரும் போர் காரணமாக உலகம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியாவில் வணிக கேஸ் சிலிண்டர்கள் மட்டுமின்றி வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு உள்ளது. இதன் காரணமாக ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
கேஸ் பயன்பாட்டு விதிகளில் பெரிய மாற்றம்
Image Credit : X

கேஸ் பயன்பாட்டு விதிகளில் பெரிய மாற்றம்

இந்த நிலையில், மத்திய அரசு கேஸ் பயன்பாட்டு விதிகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, வீடுகளில் பைப்லைன் மூலம் கேஸ் (PNG) பெறும் குடும்பங்கள், இனிமேல் LPG சிலிண்டர்களைப் பயன்படுத்த முடியாது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (MoPNG) இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Related Articles

Related image1
கேஸ் சிலிண்டர் கிடைக்கலனா என்ன?" - சமையலறையை ஸ்மார்ட்டாக மாற்றும் 4 சூப்பர் ஐடியாக்கள்!
Related image2
Biogas Plant: சிலிண்டர் கியூவை விடுங்க, வீட்டிலேயே இலவசமா கேஸ் தயாரிக்கலாம்! எப்படின்னு பாருங்க
34
PNG மற்றும் LPG வைத்திருந்தால் தடை
Image Credit : X

PNG மற்றும் LPG வைத்திருந்தால் தடை

புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரே வீட்டில் PNG மற்றும் LPG ஆகிய இரண்டு இணைப்புகளையும் வைத்திருப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. PNG இணைப்பு வைத்திருப்பவர்கள், தங்கள் LPG சிலிண்டரை உடனடியாக கேஸ் ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும். இனிமேல், இந்த வாடிக்கையாளர்கள் புதிய சிலிண்டரை புக் செய்ய முடியாது. மேலும், PNG பயனர்கள் எதிர்காலத்தில் புதிய LPG இணைப்பைப் பெறவும் முடியாது.

44
அதிரடி நடவடிக்கை ஏன்?
Image Credit : X

அதிரடி நடவடிக்கை ஏன்?

பல்வேறு நகரங்களில் PNG வசதி இருந்தும், பலர் மானிய சிலிண்டரை பதுக்குகின்றனர். இதைத் தடுத்து, தேவையுள்ளவர்களுக்கு கேஸ் கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கம். மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தால், சர்வதேச சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிலிண்டர் தேவை 75 லட்சத்திலிருந்து 88 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டுபிடிக்க, மத்திய அரசு நிர்வாகம் 'சர்ச் ஆபரேஷன்' தொடங்கியுள்ளது.

கேஸ் சப்ளை துண்டிக்கப்படலாம்

ஆகவே உங்களிடம் இரண்டு இணைப்புகளும் இருந்தால், அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம். உடனடியாக உங்கள் LPG இணைப்பை அருகிலுள்ள விநியோகஸ்தரிடம் ஒப்படைத்துவிடுங்கள். விதிகளை மீறினால், உங்கள் கேஸ் சப்ளை துண்டிக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாயு உருளை
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
RBI: ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு இருந்தால் ரூ.10,000 அபராதம்? ஆர்பிஐ ரூல்ஸ் சொல்வது என்ன?
Recommended image2
Irctc Rules: ரயிலை தவறவிட்டால் அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? ரீஃபண்ட் கிடைக்குமா?
Recommended image3
Atal Pension: அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இனி மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்? மத்திய அரசு தீவிர பரிசீலனை
Related Stories
Recommended image1
கேஸ் சிலிண்டர் கிடைக்கலனா என்ன?" - சமையலறையை ஸ்மார்ட்டாக மாற்றும் 4 சூப்பர் ஐடியாக்கள்!
Recommended image2
Biogas Plant: சிலிண்டர் கியூவை விடுங்க, வீட்டிலேயே இலவசமா கேஸ் தயாரிக்கலாம்! எப்படின்னு பாருங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved