அதிமுக ஒன்றுபட வேண்டும்.. பிரதமர் மோடி விருப்பம்! ஆனால் இரட்டை இலை மட்டும்.? ஓபிஎஸ் காட்டிய அதிரடி
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் தொண்டர்கள் மற்றும் எங்களின் நிலைப்பாடு. எங்களை சந்திக்கும் போதெல்லாம் அனைவரும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுவார். - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கு இடையில் அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பு அதிமுக உட்கட்சி மோதலை முடிவிற்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப்படி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். இந்த தீர்ப்பை பொறுத்து தேர்தல் ஆணையம் பொதுக்குழுவை அங்கீகரிக்கலாமா வேண்டாமா என்று முடிவு எடுக்கும். சமயங்களில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கூட தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க..ஜனவரி 27 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என்றும் வேட்பாளரை விரைவில் அறிவிப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சியின் தலைவர்களை ஓ பன்னீர்செல்வம் சந்தித்திருந்தார். இந்நிலையில், இன்று புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகத்தை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து ஆதரவு கோரினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பேன் என்ற நிலைப்பாடோடு ஏசி சண்முகத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளேன். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வலுவான இயக்கமாக அதிமுகவை உருவாக்கி தந்துள்ளார்கள்.
இதையும் படிங்க..லூடோ கேமில் வளர்ந்த காதல்.. பாகிஸ்தான் பொண்ணு - இந்தியா பையன் - கடைசியில் அதிர்ந்து போன போலீசார்.?
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் தொண்டர்கள் மற்றும் எங்களின் நிலைப்பாடு. எங்களை சந்திக்கும் போதெல்லாம் அனைவரும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுவார். பிரதமர் போன்ற நல்ல மனிதர் ஒன்றிணைய வேண்டும் என சொன்னால் கேட்க வேண்டும். அதிமுகவை இக்கட்டான சூழ்நிலைக்கு ஈபிஎஸ் தரப்பு தள்ளி விட்டார்கள்.
அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனால் ஓ.பன்னீர்செல்வம் காரணமாக இருக்க மாட்டார். உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேட்டபோது எம்ஜிஆர் மாளிகை நோக்கி தான் எங்கள் கார் செல்லும் என்றேன். வேறு இடங்களுக்கு போகாது என சொல்லவே இல்லை என்று விளக்கமளித்து பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.
இதையும் படிங்க..ஓய்வூதியம் 7500 ரூபாயில் இருந்து 25000 ரூபாயாக உயரப்போகிறது.. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு EPFO முக்கிய செய்தி