அரசியலை விட்டு விலக நான் தயார்.. ஒரிஜினல் வீடியோ இருக்கு! திமுகவுக்கு சவால் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
பாஜகவின் நிரூப்பிதற்கான தேர்தல் இது இல்லை. எங்களது இலக்கு நாடளுமன்ற தேர்தல் தான். கோயில் இடிப்பு தொடர்பாக டி.ஆர் பாலு பேசிய வீடியோ முழுமையானது. - அண்ணாமலை பேட்டி.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இரு நாட்களுக்கு முன் 40 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டிஆர் பாலு பேசி இருந்தார். அதில் அவர், 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்களை இடித்திருக்கிறேன். எங்கள் ஊரில், என் தொகுதியில் உள்ள சரஸ்வதி கோயில், லட்சுமி கோயில், பார்வதி கோயில் இருந்தது. அதனை இடித்திருக்கிறேன். எனக்கு ஓட்டு வராதென தெரியும்.
ஆனால் ஓட்டு வாங்குவது எப்படியென எனக்கு தெரியும் என்று பேசி இருந்தார். இதுகுறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 100 கோவில்களை இடித்ததாக திமுகவினர் பெருமை கொள்கின்றனர். இந்த காரணத்திற்காக தான் இந்துசமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் பிடியில் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க..Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?
முழு வீடியோவை கட் அண்ட் பேஸ்ட் செய்து மதவெறிப் பித்துப் பிடித்து, மலிவான பிரசாரத்தில் ஈடுபடும் அண்ணாமலை தன் அநாகரிக அரசியல் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று திமுகவை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் பேசிய போது, பாஜகவின் நிரூப்பிதற்கான தேர்தல் இது இல்லை. எங்களது இலக்கு நாடளுமன்ற தேர்தல் தான். கோயில் இடிப்பு தொடர்பாக டி.ஆர் பாலு பேசிய வீடியோ முழுமையானது. வீடியோ தடவியல் ஆய்வு செய்து டேப் எடிட் செய்யப்பட்டது என நிரூபணமானால் அரசியலைவிட்டு விலக தாயார். கே.என்.நேரு, ஈ.வி.கே.எஸ் பேசிய ஒரிஜினல் வீடியோவை எ.வ.வேலு கூறும் இடத்தில் தருகிறோம். தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார் என்பது ஒரு குற்றச்சாட்டு.
ஆனால் அதைவிட அமைச்சர் எவ்வாறு அவதூறாக பேசிகிறார் என்பது அதில் பதிவாகியுள்ளது. வீடியோவை எடிட் செய்ததாக எ.வ.வேலு நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார். டி.ஆர்.பாலு பேசிய வீடியோவை நாளை மாநில தேர்தல் ஆணையத்திடம் வீடியோவை ஒப்படைக்க உள்ளோம். சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு அருதை இல்லை. பிபிசி ஆவண படத்தில் உண்மை இல்லை. தடை செய்யப்பட்ட ஆவணப்படத்தை யார் வெளியிட்டாலும் கவலையில்லை. அது பொய் செய்தி. மோடிக்கு எதிரான ஆவணப்படத்தை பார்க்க ஒருவர் கூட வரமாட்டார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எத்தனையோ தமிழர்கள் வேலைபார்க்கின்றனர். ஐதரபாத்தில் தமிழர்கள் இருக்கின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் மும்பையில் இருக்கின்றனர். அப்படி இருக்கையில் திருப்பூரில் வடமாநிலத்தவர் பணி செய்வது குற்றமா ? பிற மாநில அரசியல்வாதிகள் இங்குள்ள அனைவரும் அவரவர் மாநிலத்திற்கு செல்லுங்கள் என அரசியல் செய்தால் அங்கிருக்கும் தமிழர்களின் வாழ்வு என்னவாகும் ? என்று கூறினார்.
இதையும் படிங்க..இந்த எச்சை பொழப்பு.. வெளியே வாடா.! போலீசை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் - பரபரப்பு வீடியோ !
மேலும், புனித யாத்திரையை வானதி ஈச்சனாரியில் இருந்து ஆரம்பிக்கிறார். கொங்கு பகுதியில் இருந்து பாஜக வளர 3 நாட்கள் நடை பயணமாக பழனி செல்கிறார். இதயம் கணக்கிறது.அக்கா 150 கிலோ மீட்டர் நடக்கிறார். அதிக உறுதியுள்ள பெண்மணி. நான் வெளியில் இருந்து ரசித்து பார்த்துள்ளேன். அவருக்கு போகும் வழியில் வரவேற்பளிக்க தயாராக உள்ளார்கள். சரித்திர பயணமாக புனித பயணம் இருக்கும் என்றார்.