Coimbatore: தனியார் கல்லூரி சுவர் இடிந்து விழுந்து ஐந்து பேர் பலியான சோகம் - 2 பேர் கைது

கோவை அருகே தனியார் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்து ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

First Published Jul 5, 2023, 8:39 PM IST | Last Updated Jul 5, 2023, 8:39 PM IST

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள  தனியார் கல்லூரியில் நேற்று மாலை சுற்றுச்சுவர் கட்டுமான பணியின் பொழுது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் நான்கு புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதில் படுகாயம் அடைந்த ஒருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். சுற்றுச்சுவர் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஆந்திராவை சேர்ந்த கொல்லி ஜெகநாதன், நக்கிலா சத்யம், ராப்பாக்க கண்ணையா, மேற்கு வங்கத்தை சேர்ந்த பிஸ் கோஸ், பரூன் கோஸ் ஆகிய 5 பேர் உயிரிழந்தவர்கள் ஆவார்கள்.

இது குறித்து சம்பவ இடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி மேயர், துணை மேயர், கோவை தெற்கு காவல் உதவி ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர், சைட் இன்ஜினியர் சாகுல் ஹமீது, கட்டுமான நிறுவன உரிமையாளர் சீனிவாசன், மேற்பார்வையாளர் அருணாச்சலம் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையின் அடிப்படையில்  அருணாச்சலம் மற்றும் சாகுல் ஹமீது ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் உடல் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து வந்து பரிசோதனை முடித்து அழைத்துச் சென்றனர். இதனை அடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை.. விதிமுறைகள் என்னென்ன?

Jio Bharat : வெறும் ரூ.999க்கு கிடைக்கும் ஜியோ பாரத் போன்.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?