Asianet News TamilAsianet News Tamil

குறும்படம் போட்ட கமல்ஹாசன்... சிக்கியது யார்?... யார்? - அனல்பறக்கும் பிக்பாஸ் புரோமோ வீடியோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே ஏற்பட்ட குழப்பத்தை போக்கும் விதமாக கமல்ஹாசன் குறும்படம் ஒன்றை போட்டுள்ளார்.

First Published Oct 29, 2022, 3:41 PM IST | Last Updated Oct 29, 2022, 3:46 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க நானும் பொம்மை... நீயும் பொம்மை என்கிற டாஸ்க் நடத்தப்பட்டது. இந்த டாஸ்கின் போது ஷெரினா தடுமாறி கீழே விழுந்துவிட்டு தன்னை தனலட்சுமி தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு அசீம் தானும் பார்த்ததாக ஷெரினாவுக்கு ஆதரவு அளிக்க உடனே அந்த கேங்கில் மகேஸ்வரி, ஏடிகே ஆகியோரும் இணைந்துகொண்டு தனலட்சுமியை திட்டினர்.

தான் அவ்வாறு செய்யவில்லை என்பதில் உறுதியாக இருந்த தனலட்சுமி, கமலிடம் குறும்படம் போடச் சொல்லி கேட்க உள்ளதாகவும், அப்படி அந்த குறும்படத்தில் நான் தவறு செய்தது போல் இருந்தால் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு இந்நிகழ்ச்சியை விட்டே வெளியேறிவிடுவேன் என கூறினார்.

இதையும் படியுங்கள்...  யாராலும் காப்பாத்த முடியாது... டுவிஸ்ட் வைத்து பேசிய கமல் - ரெட் கார்டு உடன் வெளியேறுகிறாரா அசீம்? புரோமோ இதோ

அவர் கேட்டதற்கு இணங்க இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறும்படம் போடப்பட்டு உள்ளது. தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் அதுகுறித்த காட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஷெரினாவை தள்ளிவிட்டதாக உங்கள் மீது குற்றம்சாட்டியது யார்?... யார்? என தனலட்சுமியிடம் கமல் கேட்கிறார். உடனே அசீம், ஏடிகே, மகேஸ்வரி ஆகியோரின் பெயரை தனலட்சுமி கூறுகிறார். பின்னர் குறும்படம் போடவா என கமல் கேட்டவுடன், சட்டென தனலட்சுமி ரெடி சார் என கூறுகிறார். இதன்மூலம் இன்று அசீம் கேங்கை கமல் வறுத்தெடுப்பார் போல தெரிகிறது. இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... துணிவு படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.. ரிலீசுக்கு முன்பே அஜித் படத்துக்கு குவியும் வசூல்

Video Top Stories