துணிவு படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.. ரிலீசுக்கு முன்பே அஜித் படத்துக்கு குவியும் வசூல்
அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது உறுதியாகி உள்ள நிலையில், தற்போது அப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது தெரியவந்துள்ளது.
அஜித் நடித்துள்ள துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். தமிழில் அவர் தயாரிக்கும் மூன்றாவது படம் இதுவாகும். இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். ஏற்கனவே அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய அவர் தற்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார்.
துணிவு திரைப்படம், இந்தியாவையே உலுக்கிய வங்கிக் கொள்ளையின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் அஜித்துடன் பிக்பாஸ் பிரபலங்களான சிபி, பாவனி, அமீர் ஆகியோரும் நடித்துள்ளனர். துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இதன்மூலம் அஜித் படத்திற்கு முதன்முறையாக அவர் இசையமைக்கிறார்.
இதையும் படியுங்கள்... மீண்டும் இணைந்த சூப்பர் ஹிட் ஜோடி...ரஜினியுடனான புகைப்படத்தை பகிர்ந்த குஷ்பூ
துணிவு படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரைகாண உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதுமட்டுமின்றி துணிவு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க துணிவு படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அந்நிறுவனம் ரிலீசுக்கு முன்பே கைப்பற்றும் முதல் அஜித் படம் இதுவாகும். அதுமட்டுமின்றி இதற்காக மிகப்பெரிய தொகையையும் அந்நிறுவனம் கொடுத்துள்ளதாம். அதேபோல் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கி உள்ளதாம். இதன்மூலம் ரிலீசுக்கு முன்வே அஜித்தின் துணிவு திரைப்படம் வசூல் வேட்டையை தொடங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... லெஜண்டுக்கு கிடைச்ச வரவேற்பு கூட பிரின்ஸ் படத்துக்கு கிடைக்கலயே.. பாக்ஸ் ஆபிஸில் அண்ணாச்சியிடம் தோற்றுப்போன SK