லெஜண்டுக்கு கிடைச்ச வரவேற்பு கூட பிரின்ஸ் படத்துக்கு கிடைக்கலயே.. பாக்ஸ் ஆபிஸில் அண்ணாச்சியிடம் தோற்றுப்போன SK
தொழிலதிபர் சரவணன் அருள் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் படம் வசூலித்த அளவு கூட சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கு வசூல் கிடைக்கவில்லையாம்.
சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் சினிமாவில் அடைந்த வளர்ச்சியும் யாரும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அவை இந்த அளவுக்கு சினிமாவில் அஜித், விஜய்க்கு நிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு அவரது கடின உழைப்பும் ஒரு காரணம். அந்த விடா முயற்சி தான் அவருக்கு தொடர்ந்து விஸ்வரூப வெற்றிகளை பெற்றுத் தந்தது.
ஆனால் இடையே மிஸ்டர் லோக்கல், ஹீரோ என அடுத்தடுத்து படங்கள் பிளாப் ஆனதால் சரிவை சந்தித்த சிவகார்த்திகேயன், பின்னர் டாக்டர், டான் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் மூலம் கம்பேக் கொடுத்தார். இதையடுத்து தீபாவளிக்கு பிரின்ஸ் படம் மூலம் சிவகார்த்திகேயன் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த எதிர்பார்ப்பெல்லாம் தவிடுபொடி ஆனது. ஏனெனில் பிரின்ஸ் படம் படு தோல்வியை சந்தித்துள்ளது. அப்படத்தை பார்த்து சிவகார்த்திகேயன் ரசிகர்களே அவரை திட்டிய சம்பவங்களும் அரங்கேறின. அந்த அளவுக்கு மோசமான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் ஒரே வாரத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு வாஷ் அவுட் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... யாராலும் காப்பாத்த முடியாது... டுவிஸ்ட் வைத்து பேசிய கமல் - ரெட் கார்டு உடன் வெளியேறுகிறாரா அசீம்? புரோமோ இதோ
வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மலேசியாவில் இப்படத்தின் வசூல் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. அங்கு கடந்த ஜூலை மாதம் சரவணன் அருள் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் படம் வசூலித்த அளவு கூட பிரின்ஸ் படத்திற்கு வசூல் கிடைக்கவில்லையாம்.
மலேசியாவில் லெஜண்ட் படம் ரிலீசான முதல் 5 நாட்களில் அந்நாட்டு மதிப்பில் MYR 162,540 தொகை வசூலித்து இருந்தது. ஆனால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் 6 நாட்களில் MYR 129,272 தொகை மட்டுமே வசூலித்து உள்ளதாம். இனி வரும் நாட்களிலும் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இல்லாததால் பிரின்ஸ் படத்தால் லெஜண்ட் படத்தை முந்த முடியாது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்... ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு - போலீசார் தீவிர விசாரணை