Asianet News TamilAsianet News Tamil

யாராலும் காப்பாத்த முடியாது... டுவிஸ்ட் வைத்து பேசிய கமல் - ரெட் கார்டு உடன் வெளியேறுகிறாரா அசீம்? புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார இறுதில் யார் வெளியேறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், தற்போது கமலின் புரோமோ வெளியாகி உள்ளது.

First Published Oct 29, 2022, 1:06 PM IST | Last Updated Oct 29, 2022, 1:06 PM IST

பிக்பாஸ் 6 நிகழ்ச்சி பரபரப்பாகவும், விறுவிறுப்புடனும் நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று வாரங்களை கடந்துவிட்டது. இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் நானும் பொம்மை நீயும் பொம்மை என்கிற டாஸ்க் நடைபெற்றது. அதில் ஏராளமான சண்டைகளும் நடந்தன.

குறிப்பாக அசீம் மட்டும் தனலட்சுமி, அமுதவாணன், ஷிவின் என நிறைய பேருடன் சண்டை போட்டார். அதுமட்டுமின்றி தனலட்சுமியை தள்ளிவிட்டது. ஷிவினை தரக்குறைவாக கிண்டலடித்தது. அமுதவாணனிடம் திமிராக பேசியது என அவர் செய்த அட்ராசிட்டிகள் ஏராளம் இருக்கின்றன. இதனால் இந்த வாரமும் அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் கமல் பேசுகையில், “என்ன நடந்ததுன்னு உங்களுக்கு தெரியும். எனக்கும் தெரியும், ஆனா உள்ள இருக்கிறவர்களுக்கு தெரியமாட்டேங்குதே. பழி போடுறது ஈஸி, பழிய தாங்குறது கஷ்டம். அதை அவங்களுக்கு புரிய வைக்கணும். சில பேரை காப்பாற்றி ஆகணும், சில பேரை யாராலும் காப்பாற்ற முடியாது” என கமல் சொல்வதை பார்த்தால் அசீமுக்கு ரெட் கார்டு கன்பார்ம் என்பது போல் தெரிகிறது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் 6-ல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சம்பவம் நடக்கப்போகுது... இந்த வாரம் வெளியேறப்போவது யார் தெரியுமா?

Video Top Stories