வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 14 மாவட்டங்களில் காலை வரை மழை தொடரும்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் இந்து அமைப்புகள், தமிழக அரசு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? ....... அரசியலா? என முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட மற்றும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் புதிதாக விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். முதல்வர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 12ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
பள்ளிக்கல்வித்துறை 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. டிசம்பரில் தேர்வுகள் முடிவடைந்த பிறகு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உட்பட 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
எம்ஜிஆர் மறைவுக்கு பி்ன்னர் அதிமுகவுக்கு மீண்டும் உயிர் கொடுத்து அக்கட்சியை 4 முறை அரியணையில் ஏற்றிய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
விமான சேவைகளில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்து DGCA இண்டிகோவுடன் ஆய்வு நடத்தியது. பணியாளர் திட்டமிடல் தோல்வி மற்றும் FDTL விதிமுறை சிக்கல்களால் தினமும் 170-200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தெரியவந்தது.
இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் திமுக அரசு அதனை செயல்படுத்த மறுப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் கைதையும் அவர் கண்டித்துள்ளார்.
டெல்லியில் அன்புமணிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 100 பேர் கூட கூடாதது ராமதாஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்மூலம் பாமகவில் அன்புமணி கை ஓங்கியுள்ளது தெளிவாக தெரிகிறது.
Tamil Nadu News in Tamil - Get breaking news, latest updates on politics, events, government schemes, and district news from across Tamil Nadu on Asianet News Tamil. தமிழ்நாடு அரசியல், சமூகம், பொருளாதாரம், மாவட்ட செய்திகள்.