- Home
- Tamil Nadu News
- வேலைக்கு போற அவசரத்துல இதை மறந்துடாதீங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!
வேலைக்கு போற அவசரத்துல இதை மறந்துடாதீங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!
துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணி காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திரப் பராமரிப்பு பணி
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நகரங்களை விட கிராம புறங்களில் அவ்வப்போது மின்தடை செய்து வருகின்றனர். இந்நிலையில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
கோவை
எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர், கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், மன்னம்பாளையம், வலசுபாளையம், அய்யப்பநாயக்கன்பாளையம், பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
தர்மபுரி
குமாரபுரி ஸ்பின்னிங் மில், அதியமான்கோட்டை, ஏழகிரி, பாளையம்புதூர், ஹெச்பிசிஎல், பரிகம், மணியத்தள்ளி, வீட்டு வசதி வாரியம், நீதிமன்ற வளாகம், நகர் கூடல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் 2 வரை மின் விநியோகம் தடைப்படும்.
ஈரோடு
அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை பவர் கட் செய்யப்படும்.
உடுமலைப்பேட்டை
இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், மாதரத்தி, போல்ட்ராபட்டி, கே.கே.,புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 முதல் 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

