இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
அன்பையும், உணர்வுகளையும் பகிர்வதற்காக நாம் வைத்திருக்கம் பேமிலி, பிரெண்ட்ஸ் வாட்ஸ்ஆப் குரூப்களில் கூட மதவாதிகள் விஷம் பரப்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், பல்லடம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படும். மின்வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.
திருச்செங்கோட்டில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், விஜய் உடன் இணைந்ததற்காக மாணவிகள் தன்னை வாழ்த்தியதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 2026-ல் மக்கள் சக்தியால் விஜய் முதலமைச்சர் ஆவார் என்றும் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். கொள்கை எதிரிகள் உதயநிதியை 'மிகவும் ஆபத்தானவர்' என்று கூறுவதாகக் குறிப்பிட்ட அவர், உதயநிதியின் கொள்கை உறுதியைப் பாராட்டினார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமித் ஷா மட்டுமல்ல, அவரது சங்கிப் படையே வந்தாலும் தமிழ்நாட்டை எதுவும் செய்ய முடியாது என்று அவர் சவால் விடுத்தார்.
திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவை என்ஜின் இல்லாத கார் என்றும், அதனை பாஜக என்ற லாரி கட்டி இழுப்பதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
திருவண்ணாமலை திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கட்டுப்பாடு மிக்க இளைஞரணியினரை கொள்கை வாரிசுகள் எனப் பாராட்டிய அவர், அதிமுகவை 'என்ஜினே இல்லாத கார்' என கடுமையாக விமர்சித்தார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் பொருளாதாரச் சாதனைகளைப் பாராட்டியுள்ளார். அதே சமயம், ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதால் மக்கள் அவரை வெறுப்பதாக விமர்சித்துள்ளார்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu News in Tamil - Get breaking news, latest updates on politics, events, government schemes, and district news from across Tamil Nadu on Asianet News Tamil. தமிழ்நாடு அரசியல், சமூகம், பொருளாதாரம், மாவட்ட செய்திகள்.