திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, திருமணமாகி 13 ஆண்டுகளாக குழந்தை இல்லாத மன உளைச்சலில் இருந்த பெண் ஒருவர் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தேவந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் தனியார் தொழிற்சாலை ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஜூடி ஜெகதாம்பாள் என்பவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் இருதய நோய் காரணமாக கடந்த 2024ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தை இல்லாததால் ஜூடி ஜெகதாம்பாள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பெருமாள் வேலைக்கு சென்ற நிலையில் பிற்பகல் மனைவிக்கு போனில் தொடர்பு கொண்ட போது எடுக்காததால் அதிர்ச்சி அடைந்தவர். உடேன வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள் பக்கம் கதவு தாழிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் தண்ணீர் தொட்டியில் மனைவி மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பென்னாலூர் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 13 ஆண்டுகளாக குழந்தை இல்லாத மன உளைச்சலில் பெண் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


