தமிழகத்தில் பாஜக நடத்தும் மிகப்பெரிய பொதுக்கூட்டம் இதுவாக இருக்கும் என்று திருப்பூர் பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். கூட்டம் நடைபெறும் இடத்தில் ஐந்து லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் இருக்கும் என்று ஒரு நிர்வாகி சொல்கிறார்.
திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு நிர்வாகத்தில் தலைவராகிய தனது அனுமதி இல்லாமல் அரசு நிதியை பயன்படுத்துவதாக, திருப்பூர் மாவட்ட ஊராட்சிக் குழு செயலரை கண்டித்து ஊராட்சி குழு தலைவர் வெளிநடப்பு செய்ததால பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள என் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடு தமிழகத்தில் முக்கிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு மு. பெ. சாமிநாதன் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவருக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
தாராபுரத்தில் கடந்த ஆறு மாதங்களாக போதை மறுவாழ்வு மையம் போலியாக நடத்தி வந்துள்ளனர். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 36 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருப்பூர் பேருந்து நிலையத்தில் பிறந்து 1 மாதமே ஆன பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற இளம் பெண் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை அருகே விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் திமுக எம்.பி கனிமொழி.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் குடுகுடுப்பை வாசித்தவாறு திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் காவிலிபாளையம் அருள்ஜோதி நகர் பகுதியில் மோசமான சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டு மாநகராட்சி மேயரிடம் மனு அளித்தனர்.
வருகின்ற 25ம் தேதி திருப்பூரில் நடைபெறவுள்ள என் மண் என் மக்கள் யத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும், அன்று எங்களுக்கான அங்கீகாரத்தை தமிழகம் பார்க்கும் என்றும் பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
Tiruppur News in Tamil - Get the latest news, events, and updates from Tiruppur district on Asianet News Tamil. திருப்பூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.