விபத்தில் காயமடைந்த மாணவர்.. சட்டென கவனித்த திமுக எம்.பி கனிமொழி.. குவியும் பாராட்டுக்கள்!

கோவை அருகே விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் திமுக எம்.பி கனிமொழி.

DMK MP Kanimozhi helped a college student who was fighting for his life in an accident-rag

கோவை பீளமேடு, அவினாசி சாலையில் தனியார் ஹோட்டல் அரங்கில் திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கோரிக்கை மனுக்களை பெற்றனர். அந்த குழுவின் தலைவர் எம்.பி கனிமொழி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இதில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு‌ நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும், நேரடியாகச் சந்தித்து மனுக்களை பெற்றனர்.

பிறகு இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவிநாசி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மாணவர் ஒருவர் லாரியில் மோதி விபத்தில் சிக்கிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.

அப்போது ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் விபத்தில் சிக்கிய மாணவரை மீட்டு திமுக கட்சியை சார்ந்த ஒருவரின் வாகனத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாணவரை சேர்த்து உள்ள கோவை பிரேமா மருத்துவமனைக்கு சென்று உடல் நிலையை கவனித்து தெரிவிக்குமாறு மருத்துவரிடம் கூறினார். இது அங்கிருந்தோரிடம் பாராட்டை பெற்றுள்ளது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கிமீ தூரம் பயணிக்கலாம்.. புதிய எலக்ட்ரிக் பைக் வாங்க அருமையான வாய்ப்பு..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios