ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா; திருப்பூரில் குடுகுடுப்பை வாசித்து பிரசாரத்தை தொடங்கிய திமுக

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் குடுகுடுப்பை வாசித்தவாறு திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

First Published Feb 8, 2024, 10:13 AM IST | Last Updated Feb 8, 2024, 10:13 AM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்து தெக்காலூர் குப்பச்சிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் திமுக தலைமைக் கழக பேச்சாளர்களில் ஒருவரான சேலம் கோவிந்தன் என்பவர் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க கோரி வீதிகள் தோறும் சென்று தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கியுள்ளார்.

தாராபுரம், தெக்கலூர், குப்பிச்சிபாளையம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு நேரடியாக வீதிகளில் சென்ற அவர் இந்தியா கூட்டணிக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க கோரி குடுகுடுப்பை வாசித்தவாறு பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்வு அப்பகுதியில் உள்ள கிராம மக்களை வெகுவாக கவர்ந்தது.

Video Top Stories