Asianet News TamilAsianet News Tamil

தாராபுரத்தில் போலி போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல்

தாராபுரத்தில் கடந்த ஆறு மாதங்களாக போதை மறுவாழ்வு மையம் போலியாக நடத்தி வந்துள்ளனர். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 36 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

First Published Feb 21, 2024, 3:32 PM IST | Last Updated Feb 21, 2024, 3:32 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் என்ற பெயரில் கடந்த ஆறு மாதங்களாக இந்த அனுமதியும் பெறாமல் நடத்தி வந்த நிலையில் நேற்று ஒருவர் சிகிச்சையின் போது இறந்துள்ளார் இது குறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்பவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் அப்பொழுது எந்தவித அனுமதியும் இல்லாமல் நடத்தியது தெரிய வந்தது மறுவாழ்வு மையத்தில் 36 பேர் இருந்த நிலையில் ஒருவர் இறந்தார் மற்ற 35 பேரையும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு மனநல மருத்துவர் வைத்து சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தனர் மனநலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தனர் மேலும் தாராபுரம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் மருத்துவ அதிகாரிகள் உள்ள விட்டார் கலந்து கொண்டனர்.

Video Top Stories