தருமபுரி மாவட்டத்தில் நில அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூதாட்டி தீக்குளிக்க முயற்சித்த நிலையில், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கல்லூரி மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள், நண்பர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் சாலையின் தடுப்புச் சுவற்றில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கணவன், கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தருமபுரியில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய இளைஞரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர், மருத்துவர்கள், மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாடு தொடர்பான விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணிக்கு தருமபுரியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள மோளையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அகில் பிரியா (20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உறவினரான ஸ்டாலின் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
தருமபுரியில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரமேசுக்கும் விஷாலினிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் ரமேஷ்சின் குடும்பத்தாரும் விஷாலினியிடம் பிரச்சனை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஷாலினி தனது தாயாரிடம் போனில் சொல்லி கதறி அழுதுள்ளார்.
தருமபுரியில் தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்த பெண் உயிரிழந்த நிலையில், அதிகாரிகளின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
Dharmapuri News in Tamil - Get the latest news, events, and updates from Dharmapuri district on Asianet News Tamil. தர்மபுரி மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.