ஐயோ என் பொண்ண மாமியார் வீட்டில டார்ச்சர் செய்தே கொன்னுட்டாங்களே.. காவல் நிலையத்தில் கதறும் தாய்..!
ரமேசுக்கும் விஷாலினிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் ரமேஷ்சின் குடும்பத்தாரும் விஷாலினியிடம் பிரச்சனை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஷாலினி தனது தாயாரிடம் போனில் சொல்லி கதறி அழுதுள்ளார்.
திருமணமான 19 வயது இளம்பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள நெருப்பூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சம்பு (38). இவரது கணவர் மணி. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மணி சம்புவை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர்களது மகள் விஷாலினி (19). கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 10ம் வகுப்பு படிக்கும் பொழுது ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துது கொண்டார்.
இதையும் படிங்க;- உல்லாசத்தின் ஓயாமல் அழுத குழந்தை.. கடுப்பான கள்ளக்காதலன்.. வாயில் மதுவை ஊற்றி கொடூர கொலை.! சிக்கிய காம தாய்!
இதுகுறித்து பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ரமேசுக்கும் விஷாலினிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் ரமேஷ்சின் குடும்பத்தாரும் விஷாலினியிடம் பிரச்சனை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஷாலினி தனது தாயாரிடம் போனில் சொல்லி கதறி அழுதுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் விஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சம்புவின் உறவினர்க்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் தனது மகள் வீட்டிற்கு சென்று பார்த்த போது விசாலினி இறந்த நிலையில் கிடந்துள்ளார். பின்னர் விசாலினி உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- ரயிலில் ஐடி பெண் ஊழியரிடம் அந்தரங்க உறுப்பை காட்டிய காவலர்!துணிச்சலுடன் வீடியோ எடுத்து என்ன செய்தார் தெரியுமா?
இது குறித்து சம்பு தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.