உல்லாசத்தின் ஓயாமல் அழுத குழந்தை.. கடுப்பான கள்ளக்காதலன்.. வாயில் மதுவை ஊற்றி கொடூர கொலை.! சிக்கிய காம தாய்!
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த ஒரு குழந்தையை பெற்ற தாய் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாயில் மது ஊற்றியும், கட்டையால் அடித்தும் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை பகுதியை சேர்ந்தவர் சீனு (28). இவரது மனைவி பிரபுஷா (23). இவர்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு நட்சன் ராய் (3), அரிஸ்டோ பியூலன் (1) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரபுஷாவுக்கும் முகமது சதாம் உசேன் (32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதில் சீனுவிடம் மூத்த குழந்தையும், பிரபுஷாவிடம் 2வது குழந்தை அரிஸ்டோ பியூலனும் இருந்தனர். சீனுவை பிரிந்த பிரபுஷா, முகமது சதாம் உசேனுடன் தூத்துக்குடியில் வசித்து வந்தனர். இந்நிலையில் திடீரென குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என கூறி அரிஸ்டோ பியூலனை, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது குழந்தை இறந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க;- ரயிலில் ஐடி பெண் ஊழியரிடம் அந்தரங்க உறுப்பை காட்டிய காவலர்!துணிச்சலுடன் வீடியோ எடுத்து என்ன செய்தார் தெரியுமா?
இதனையடுத்து குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பிரபுஷா, முகமது சதாம் உசேன் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தை அரிஸ்டோ பியூலனை இருவரும் சேர்ந்து மது கொடுத்து அடித்து உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- ஹவுஸ் ஓனர் மனைவியை கரெக்ட் செய்த யோகா மாஸ்டர்! உல்லாசத்துக்காக கணவனை கொன்ற 2வது மனைவி!சிக்கியது எப்படி?