Asianet News TamilAsianet News Tamil

Kovai Temple: கோவையில் அலகு குத்தி தீச்சட்டி ஏந்தி சென்ற பக்தர்கள்..குளிர்பானம் கொடுத்து வரவேற்ற இஸ்லாமியர்கள்

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள விளையாட்டு முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் ஒரு பகுதியாக,  அந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் நள்ளிரவில் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி சென்ற பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள்  வழங்கினர். 
 

பக்தர்களுக்கு குளிர்பானம்

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் விளையாட்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்  தேர் திருவிழா நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோட்டைமேடு கோவில் வீதியில் உள்ள தரிக்கத்துல் இஸ்லாம் ஷாபியா சுன்னத் ஜமாத் சார்பில் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு இரவு நேரத்தில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. அம்மன் சிலைகளை தலையில் ஏந்தியபடி ஊர்வலம் பள்ளிவாசல் வழியாக வந்தது.

அப்போது ஏராளமான பக்தர்கள் அலகுகுத்தி, தீச்சட்டி ஏந்தி , பால்குடம் ஏந்தியபடி  வந்தனர். அப்படி வந்த பக்தர்களுக்கு பள்ளிவாசல் முன்பாக இருந்த இஸ்லாமியர்கள் தண்ணீர் மற்றும் குளிர்பானம் ஆகியவற்றை வழங்கி மத நல்லிணககத்தை வெளிப்படுத்தினர். ஆண்டுதோறும் நள்ளிரவில் நடைபெறும் இந்த கோவில் திருவிழாக்களின் பொழுது, இஸ்லாமியர்கள் உறுதுணையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories