Prabu Deva: நான் மிஸ் பண்ணிட்டேன்.. உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி! பிரபு தேவா வெளியிட்ட வீடியோ!

நடிகர் பிரபு தேவா சென்னையில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என  வருத்தம் தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

First Published May 2, 2024, 6:49 PM IST | Last Updated May 2, 2024, 6:49 PM IST

சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும் நிகழ்ச்சி உலக சாதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா கலந்து கொள்வார் என கூறப்பட்டதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 5 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாட தயாராகி இருந்தனர்.

வெளியிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த நிகழ்ச்சியை காலை 7:30 மணிக்கு துவங்கி 9 மணிக்கும் முடிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டது. எனவே காலை 5 மணிக்கே தங்களின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் ராஜரத்தினம் மைதானத்திற்கு வந்து விட்டனர். பிரபு தேவா இப்போது வருவார்... அப்போது வருவார் என கூறியே 10 மணியை தாண்டிவிட்ட போதிலும் நிகழ்ச்சி துவங்கப்பட வில்லை. அனைவரும் வெயிலின் தாக்கத்தில் ஒருபுறம் அவதி பட, குழந்தைகள் பசியால் சுருண்டு விட்டனர்.

பின்னர் பெற்றோர் நிகழ்ச்சியாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட... பின்னரே பிரபு தேவா வரமாட்டார் என்பது தெரிய வந்தது. எனினும் இந்த நிகழ்ச்சியை காணொளி மூலம் பிரபு தேவா பார்ப்பார் என கூறினார் நடன இயக்குனர் ராபர்ட். காணொளி மூலம் தோன்றி அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட பிரபு தேவா தற்போது வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் இந்த நிகழ்ச்சியை மிஸ் செய்து விட்டதாகவும், அனைவரின் அன்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அனைவரையும் சந்திப்பேன் என கூறியுள்ளார். அந்த வீடியோ இதோ...