கொடைக்கானலில் துர்கா ஸ்டாலின் படகு சவாரி!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கொடைக்கானலில் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்

Share this Video

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை கொடைக்கானல் ஏரியில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் படகு சவாரி செய்து மகிழ்ந்தார். படகு சவாரி செய்து முடித்த பின்னர், படகு குழாமிற்கு வெளியே காத்திருந்த சுற்றுலா பயணிகள் உடன் அவர் புகைப்படம் எடுத்து கொண்டார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

உதயநிதி ஸ்டாலின் லண்டன் பயணம்: ரியல் ரவுடியுடன் விமானத்தில் போஸ்..!

கொடைக்கானல் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழும் நேரம் முடிந்த பின்னர், முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் படகு சவாரி செய்தார். இதன் மூலம், சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வண்ணம் பார்த்து கொள்ளப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வண்ணம் போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video