திமுக இளைஞரணி மாநாடு தொடர்பான இருசக்கர வாகன பேரணி; தருமபுரியில் அமோக வரவேற்பு

சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாடு தொடர்பான விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணிக்கு தருமபுரியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

First Published Nov 24, 2023, 6:58 PM IST | Last Updated Nov 24, 2023, 6:58 PM IST

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் நடைபெறும் இரண்டாவது இளைஞர் அணி மாநாட்டிற்கு வலு சேர்க்கும் விதமாகவும், நீட் விலக்கு எங்கள் இலக்கு என்ற வாசகங்களுடன் கன்னியாகுமரியில் தனது இருசக்கர வாகனத்தில் பேரணியை துவக்கி வைத்தார். 

இதன் தொடர்ச்சியாக பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாநாடு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் நீட் விலக்கு எங்கள் இலக்கு என்ற வாசகங்களுடன் 188 பைக் ரைடர்ஸ் தங்கள் வாகனங்களில் கட்சி கொடியினை கட்டிக்கொண்டு இருசக்கர பிரசார பேரணியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேரணியில் கலந்து கொண்ட வாகன ஓட்டிகளுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன். பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமரன், மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், பொம்மிடி நகர செயலாளர் கௌதம்  உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

Video Top Stories