தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து பெண் பலி; அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு
தருமபுரியில் தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்த பெண் உயிரிழந்த நிலையில், அதிகாரிகளின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கீழ்மொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாரப்பன் என்பவரது மனைவி பூவி (வயது 55). தனது வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளின் பாலை கறந்து தனியார் பால் நிறுவனத்திற்கு விற்பனை செய்து வருகிறார். அந்த வகையில் சம்பவத்தன்று பால் எடுத்துக் கொண்டு கனகராஜ் என்பவரது தோட்டத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது கனகராஜின் தோட்டத்தில் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்து கிடப்பது தெரியாமல் அதனை தவறுதலாக மிதித்துள்ளார். இதனால் தூக்கி வீசப்பட்ட பூவி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறிது நேரம் கழித்து அவ்வழியாக வந்த வேறு சிலர் பூவி மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
புதுவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார்
இதனைத் தொடர்ந்து மின் துறையினருக்கு தகவல் தெரிவித்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சடலத்தை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட பகுதியில் மின் கம்பிகள் அனைத்தும் எட்டிப் பிடிக்கும் உயரத்தில் இருப்பதாகவும், இது சம்பந்தமாக பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை, தாழ்வான மின் கம்பிகள் குறித்து மின்சார துறையினர்ருக்கு தகவல் கொடுக்கப்பட்ட பிறகும் நடவடிக்கை எடுக்காமல் மின்வாரியம் அலட்சியமாக செயல்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இது தொடர்பாக மொரப்பூர் காவல் துறையினர் வழக்குபபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.