Asianet News TamilAsianet News Tamil

உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு ஆட்சியர், மருத்துவர்கள் மலர் தூவி மரியாதை; உறவினர்கள் நெகிழ்ச்சி

தருமபுரியில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய இளைஞரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர், மருத்துவர்கள், மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

district collector and doctors paid respect to young man dead body who donate his organ in dharmapuri district vel
Author
First Published Nov 27, 2023, 6:25 PM IST | Last Updated Nov 27, 2023, 6:25 PM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த எர்ரசீகல அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் கவியரசு (வயது 23). கடந்த 24ம் தேதி அதியமான் கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் படுக்காயமடைந்தார். அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கவியரசுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதால் சிகிச்சை அளித்தும் பயனில்லை என தெரிவித்தனர். இதனையடுத்து  மீண்டும் கவியரசு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதை அடுத்து அவர் மூளை சாவு அடைந்தார். பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று அவரது குடும்ப உறுப்பினர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். 

சேலத்தில் சிறுவர்களுடன் இணைந்து கோலி குண்டு விளையாடிய பாமக எம்எல்ஏ அருள்

இதன் பின்னர் அறுவை சிகிச்சை மூலம் இதயம், நுரையீரல் சென்னைக்கும், சிறுநீரகம் கோயம்புத்தூர் மற்றும் அரசு சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கல்லீரல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கிரீன் கார்ட் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு இதயத்தை பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர். உறுப்புகள் தாணமாக வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை கவியரசுவின் உடலுக்கு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios