ரிலீசுக்கு தயாரானது சமந்தாவின் சரித்திர படம்... மாஸான பிஜிஎம் உடன் வந்த ‘சாகுந்தலம்’ மோஷன் போஸ்டர் வீடியோ இதோ

குணசேகர் இயக்கத்தில் நீலிமா குணா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Share this Video

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள படம் சாகுந்தலம். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். நீலிமா குணா தயாரித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கி உள்ளார். மணி சர்மா இசையமைத்துள்ள இப்படத்திற்கு சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் படத்தின் ரிலீஸ் தேதியும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு பேமஸ் ஆக இருந்த பெப்சி உமா.... தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Related Video