MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு பேமஸ் ஆக இருந்த பெப்சி உமா.... தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு பேமஸ் ஆக இருந்த பெப்சி உமா.... தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Pepsi Uma : 90ஸ் கிட்ஸின் பேவரைட் தொகுப்பாளினியும், பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவருமான உமா பற்றி இந்த தொகுப்பில் விவரமாக பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Sep 23 2022, 12:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தொகுப்பாளினி பெப்சி உமா, 1974-ம் ஆண்டு ஆக்ஸ்ட் 18ம் தேதி சென்னையில் பிறந்தார். இவருடையை உண்மையான பெயர் உமா மகேஸ்வரி. இவருடைய அப்பா ஒரு வழக்கறிஞர், அம்மா நடனக்கலைஞர் மற்றும் சிறந்த ஓவியராகவும் இருந்து வந்துள்ளார். சென்னையில் பள்ளிப்படிப்பை படித்த இவர், 12-ம் வகுப்பு படிக்கும்போதே தொகுப்பாளினியாக அறிமுகமாகிவிட்டார். இவர் முதன்முதலில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான வாங்க பழகலாம் நிகழ்ச்சி மூலம் தனது பயணத்தை தொடங்கினார்.

இந்த நிகழ்ச்சி 100 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பான சமயத்தில் தான் அவருக்கு பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பை ஏற்பதற்கு முன் பல்வேறு கண்டிஷன்களை போட்டாராம் உமா. அது என்னவென்றால், தன்னுடைய உடை, மேக் அப் மற்றும் தான் பேசக்கூடிய ஸ்டைல் உள்ளிட்ட விஷயங்களில் நீங்கள் தலையிடக்கூடாது என்பதுதானாம். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓகே சொன்னதை அடுத்து தான் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதித்தாராம் உமா.

25

இந்நிகழ்ச்சி ஒளிபரப்பான சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகிவிட்டது. இதற்கு காரணம் அவர் அணிந்து வரும் புடவை, அவருடைய ஹேர்ஸ்டைல் மற்றும் அவர் பேசும் விதம் ஆகியவை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும் பெரிதும் கவர்ந்தது. ஒவ்வொரு வார இறுதியில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போகும் டிஆர்பி எகிற ஆரம்பித்தது.

இதையும் படியுங்கள்... ரூ.100 கோடிக்கு மேல் வசூல்..திருப்புமுனை தந்த திருச்சிற்றம்பலம்- ஹாட்ரிக் தோல்விக்கு பின் தனுஷ் மீண்டுவந்த கதை

அன்றைய காலகட்டத்தில் சினிமா நடிகர், நடிகைகளுக்கு இருந்த ரசிகர்கள் அளவுக்கு பெப்சி உமாவுக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்ததால், பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தினார் உமா. அதுமட்டுமின்றி அந்த ஷோவில் பெப்சி உமா, கவர்ச்சி உடை அணிந்ததே இல்லை அதுமட்டுமின்றி கவர்ச்சியாக பேசியதும் இல்லை. இதன் காரணமாகவே அவரை மக்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

35

குறுகிய காலத்தில் பெப்சி உமா, மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்ததால் அன்றைய காலகட்டத்தில் இருந்த முன்னணி இயக்குனர்கள் பலரும் அவரை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சித்தனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய முத்து படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் பெப்சி உமாவை தான் அணுகினாராம். ஆனால் அவர் முடியவே முடியாது என மறுத்த பின்னர் தான் அப்படத்தில் மீனாவை நடிக்க வைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் வடிவேலு... போண்டா மணிக்கு செய்ய உள்ள உதவி குறித்தும் பேச்சு

அவர் சினிமாவில் நடிக்க மறுத்ததற்கான காரணம், அவருக்கு சினிமாவின் மீதும், நடிப்பின் மீதும் சுத்தமாக ஆர்வம் இல்லையாம். ஆர்வமில்லாத ஒரு வேலையை எப்படி செய்ய முடியும், அதனால் தான் நடிக்கவே மாட்டேன் என பாரதிராஜா, பாலசந்தர் போன்ற பல ஜாம்பவான் இயக்குனர்கள் தங்களது படங்களில் நடிக்க அழைத்தும் மறுத்துவிட்டாராம் உமா.

45

நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டிய சம்பவம் அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல் பெப்சி உமாவுக்கு அவரது தீவிர ரசிகர்கள் கோவில் கட்டினார்களாம். இதைக்கேள்விப்பட்ட பாமக நிறுவனரும், அரசியல்வாதியுமான ராமதாஸ், பெப்சி உமா என்ன செய்துவிட்டார், அவருக்கு கோவில் கட்டினா தமிழ்நாடே அழிஞ்சு போயிடும் என விமர்சனம் செய்திருந்தார். 

இதுகுறித்து பெப்சி உமா சொன்ன கருத்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. ராமதாஸ் சொன்னது 100 சதவீதம் சரி, நான் என்ன செஞ்சிட்டேன்னு எனக்கு கோவில் கட்டுறீங்க. இந்த மாதிரியெல்லாம் செய்யாதீங்க. என்னுடைய செயலை மட்டும் பாராட்டினால் போதும். என் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினாராம்.

55

இவ்வாறு சினிமா நடிகர், நடிகைகள் அளவுக்கு பேமஸாக இருந்த பெப்சி உமா, ஒரு கட்டத்தில் மீடியாவை விட்டே ஒதுங்கினார். அதன்பின் அவர் என்ன செய்கிறார் என்கிற தகவல் கூட வெளியாகாமல் இருந்தது. தற்போது அவர் தனது கணவரின் பிசினஸை கவனித்துக்கொண்டு குடும்பத்தினரும் சந்தோஷமாக வசித்து வருகிறாராம்.

இதையும் படியுங்கள்... விரைவில் அம்மா ஆகப்போகிறாரா நயன்தாரா..? விக்னேஷ் சிவன் பதிவிட்ட போட்டோவால் குழப்பத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெப்சி உமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image2
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image3
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved