Asianet News TamilAsianet News Tamil

திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் வடிவேலு... போண்டா மணிக்கு செய்ய உள்ள உதவி குறித்தும் பேச்சு

vadivelu : உடல்நல குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன் என நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

First Published Sep 23, 2022, 10:25 AM IST | Last Updated Sep 23, 2022, 10:25 AM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்ட அவர், அதனைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது : “நான் நடிக்கின்ற, வரபோகிற படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். தற்போது நாய் சேகர் ரிட்டன், மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில்  நடித்து வருகிறேன். இயக்குனர் மாரி செல்வராஜ் திரைப்படத்தில் தான் குணசித்திர நடிகனாக நடித்து இருக்கிறேன். உதயநிதி  ஸ்டாலின்  உடன் நடித்த மாமன்னன் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது. 

இதையும் படியுங்கள்... போண்டா மணியின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் : சுகாதாரத்துறை அமைச்சர்

என்னோடு தொடர்ந்து நடித்த துணை நடிகர்களுக்கான காமெடி டிராக், தற்போது  இல்லாததால் முன்பு போல் அவர்களுடன்  சேர்ந்து  நடிக்க இயலவில்லை. தற்போது நான் நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே  இருக்கும். தற்போது நடித்துள்ள நாய் சேகர்  ரிட்டன் படத்தில் பாடல் பாடியுள்ளேன். அப்பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்றும் தெரிவித்தார் மேலும் உடல்நல குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன்” எனவும் வடிவேலு கூறினார்.

இதையும் படியுங்கள்... 2 கிட்னியும் செயலிழந்துவிட்டது! ICU-வில் பிரபல காமெடி நடிகர்! சிகிச்சைக்கு உதவுங்கள் கதறிய நடிகர் பெஞ்சமின்!

Video Top Stories