மாநாடு தயாரிப்பாளரின் அடுத்த படம் ‘ஏழு கடல் ஏழு மலை’... ராம் - நிவின் பாலி கூட்டணியின் கலக்கலான டைட்டில் டீசர்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.

Ganesh A  | Published: Oct 11, 2022, 3:18 PM IST

சிம்பு நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி, அடுத்ததாக இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தை தயாரித்து வந்தார். இப்படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்க, நகைச்சுவை நடிகர் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் டைட்டில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘ஏழு கடல் ஏழு மலை’ என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்காக வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் காதல்னு வந்துட்டா மனசு மட்டுமில்ல, உடம்பு உசுரு எல்லாம் பறக்கும் என இயக்குனர் ராம் பேசியுள்ள வசனமும் பின்னணியில் இடம்பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்... வாடகைத் தாய் தடைச் சட்டத்தால் விக்கி - நயன் ஜோடிக்கு பாதிப்பில்லை - அடித்து சொல்லும் சட்ட வல்லுநர்கள்

Read More...

Video Top Stories