விடுதலைக்கு முன்... நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ள வெற்றிமாறனின் புதிய படம் - வைரலாகும் டிரைலர் இதோ

விடுதலை படத்தின் பணிகளில் வெற்றிமாறன் பிசியாக உள்ள நிலையில், அவர் தயாரித்துள்ள புதிய படம் ஒன்று நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Ganesh A  | Published: Nov 4, 2022, 8:19 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன், அவ்வப்போது தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த பேட்டைக்காளி என்கிற வெப் தொடர் தீபாவளியை ஒட்டி ஓடிடி-யில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. தற்போது அவர் தயாரித்துள்ள மேலும் ஒரு திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

கைசர் ஆனந்த் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரித்துள்ள படம் ‘அனல் மேலே பனித்துளி’. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் ஆதவ் கண்ணதாசன், அழகம்பெருமாள், அனுபமா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜாமுகமது படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அனல் மேலே பனித்துளி திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 18-ந் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இப்படத்தின் டிரைலர் ரிலீசாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வனாக பிரதிபலிக்க என்ன தவம் செய்தேனோ... சதய விழா குறித்து ரீல் ராஜ ராஜசோழன் நெகிழ்ச்சி

Read More...

Video Top Stories