bharathi kannamma : என்னது பாரதிக்கும்..வெண்பாவுக்கும் திருமணம் ஆகிடுச்சா? வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்

மறுபுறத்தில் ரோஹித் ஓரமாக நின்று அழுது கொண்டிருக்கிறார், அந்த வீடியோவுடன் துரோகம் துரோகம் என்கிற பாட்டு இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

Share this Video

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முன்னதாக திருமணம் செய்து கொள்ள மண்டபத்திற்கு வந்த வெண்பாவும் பாரதியும் திருமணத்தை நிறுத்தி வந்த தனது குடும்பத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கண்ணம்மா பத்ரகாளியாக மாறி கேள்வி மேல் கேள்வி கேட்க உண்மையை உடைக்கிறார் பாரதி. தான் கர்ப்பமாக உள்ள விஷயம் அனைவருக்கும் தெரிந்ததால்அவமானப்பட்டு நிற்கும் வெண்பாவை ஷர்மிளா அழுது கொண்டே குழந்தைக்கு அப்பா யார் என கேட்க. அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தான் தகப்பன் என்பதை வெளிப்படையாக கூறுகிறார் ரோஹித். இதனால் மொத்த பேரும் அதிர்ச்சியாய் நிற்கின்றனர். 

மேலும் செய்திகளுக்கு...Bigg Boss Tamil Season 6 Promo : தட்டு கழுவ முடியாத..இவரெல்லாம் நேர்மையானவரா? விக்ரமன் குறித்த ஏடிகே விளாசல்

இதை அடுத்து ரசிகர்கள் ரோஹிதுக்கும் வெண்பாவிற்கு தான் திருமணம் என்கிற முடிவிற்கு வந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது ரோஹித் அதாவது நடிகர் சபரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் வெண்பாவும் பாரதியும் மாலையும் கழுத்துமாக மேடையில் அமர்ந்திருக்க, ஷர்மிளா மற்றும் சௌந்தர்யா இருவரும் அருகருகே இருக்கின்றனர். மொத்த குடும்பமும் ,சுற்றமும் உற்றமும் அமர்ந்து அவர்களின் திருமணத்தை வேடிக்கை பார்க்கிறது. மறுபுறத்தில் ரோஹித் ஓரமாக நின்று அழுது கொண்டிருக்கிறார், அந்த வீடியோவுடன் துரோகம் துரோகம் என்கிற பாட்டு இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

Related Video