Bigg Boss Tamil Season 6 Promo : தட்டு கழுவ முடியாத..இவரெல்லாம் நேர்மையானவரா? விக்ரமன் குறித்த ஏடிகே விளாசல்

ஒரு தட்டு கூட கழுவ முடியாதவர் எப்படி தன்னை முன்னிறுத்த முடியும் என்பது தனக்கு புரியவே இல்லையே என கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Share this Video

தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தற்போது தமிழில் ஆறாவது சீசனில் ஒளிபரப்பாக வருகிறது. இந்த சீசனையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.

 21 போட்டியாளர்களுடன் தடபுடலாக ஒளிபரப்பான இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 18 போட்டியாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் நாமினேஷனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த டிவி - அந்த டிவி என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 25 வது நாளான இன்று பிபி 6 டேலண்ட் ஷோ என்கிற பெயரில் போட்டியாளர்கள் நடத்திய காட்சிகள் முத்த ப்ரோமோவில் வெளியாகி இருந்தது.

மேலும் செய்திகளுக்கு...bigg boss tamil 6 vikraman : சின்னத்திரைக்கு மிகவும் நெருக்கமான நபரா விக்ரமன்?

தற்போது வீட்டில் உள்ள மற்றவர்கள் குறித்து ஏடிகே பேசிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் படுக்கையில் இருந்தபடி ராமிடம் பேசிக் கொண்டிருக்கும் ஏடிகே...வீட்டில் உள்ள மற்றவர்கள் குறித்து விமர்சிக்கிறார். அப்போது விக்ரமன் தன்னை நேர்மையானவர் என்று சொல்லுவது தனக்கு பிடிக்கவே இல்லை என்றும், ஒரு தட்டு கூட கழுவ முடியாதவர் எப்படி தன்னை முன்னிறுத்த முடியும் என்பது தனக்கு புரியவே இல்லையே என கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Related Video