- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- bigg boss tamil 6 vikraman : சின்னத்திரைக்கு மிகவும் நெருக்கமான நபரா விக்ரமன்?
bigg boss tamil 6 vikraman : சின்னத்திரைக்கு மிகவும் நெருக்கமான நபரா விக்ரமன்?
நடிகராக தனது வாழ்க்கையை துவங்கிய இவர் தற்போது பிக் பாஸ் சீசன் 6-ல் பர்ஃபார்ம் செய்வது அனைவரையும் ஈர்த்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக 20 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் மைனா நந்தினி மட்டும் சேர்ந்து இருந்தார். இதை தொடர்ந்து சாந்தி மற்றும் அசல் இருவரும் எலிமினேஷனாக வெற்றியாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜி பி முத்து பாதியிலேயே சென்றுவிட்டார்.
தற்போது ரசிகர்களின் மொத்த கவனமும் விக்ரம் மீதுதான் பதிந்துள்ளது. அவரின் குணாதிசயங்களும் பிரச்சனை என்று வந்தால் அவர் குரல் கொடுப்பதும் என விக்ரமன் ரசிகர்களை சற்று ஈர்த்து வைத்துள்ளார் என்றே கூறலாம்.
தற்போது இவர் குறித்த தகவல்களை பார்க்கலாம். விக்ரமன் தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர், செய்தி ஆசிரியர் என ஊடகத்தில் பணிபுரிந்துள்ளார். அதோடு தற்போது அரசியல்வாதி மற்றும் யூட்யூப்பாராகவும் இருந்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு... சூர்யாவுடன் கை கோர்க்கும் ஜெய் பீம்... இந்த முறை வேற பிளான்...
vikraman
முன்னதாக விஜய் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்னும் சீரியல் மூலம கலைத்துறைக்கு அறிமுகமாகியுள்ளார் விக்ரமன். பின்னர் குற்றமும் பின்னணியும் போன்ற சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
vikraman
சன் டிவியில் ஒளிபரப்பான இஎம்ஐ என்கிற தவணை முறை வாழ்க்கை குறித்த நிகழ்ச்சியிலும் முக்கிய தோன்றியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா இவருக்கு அறிமுகத்தை உண்டாக்கியிருந்தது.
vikraman
பின்னர் விக்ரமன் புதிய தலைமுறை மற்றும் கலாட்டா மீடியா உள்ளிட்ட சேனல்களிலும் பணியாற்றியுள்ளார். தற்போது அரசியல் பிரபலமாக உள்ள இவர் 2020ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார்.
vikraman
நடிகராக தனது வாழ்க்கையை துவங்கிய இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ல் பர்ஃபார்ம் செய்வது அனைவரையும் ஈர்த்துள்ளார். இன்று கூட இவர் நடித்த நாடகம் குறித்து ப்ரோமோ வெளியாகி வாழ்த்துக்களை பெற்று வருகிறது.