- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- பிக் பாஸ் டைட்டிலை தட்டிதூக்கிய திவ்யா கணேஷ்... டிராபியோடு அவர் அள்ளிச் சென்ற பரிசுகள் என்னென்ன?
பிக் பாஸ் டைட்டிலை தட்டிதூக்கிய திவ்யா கணேஷ்... டிராபியோடு அவர் அள்ளிச் சென்ற பரிசுகள் என்னென்ன?
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் திவ்யா கணேஷ். அவர் டிராபியை தவிர என்னென்ன பரிசுகள் வென்றுள்ளார் என்பதை பார்க்கலாம்.

Bigg Boss Title Winner Divya Ganesh
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதன்பின்னர் கமல்ஹாசன் விலகியதை அடுத்து 8-வது சீசனில் இருந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அவர் தொகுத்து வழங்கும் இரண்டாவது சீசன் இதுவாகும். இந்த சீசன் முதல் ஐம்பது நாட்கள் நமத்துப்போன பட்டாசு போல இருந்தாலும், அடுத்த ஐம்பது நாட்கள் சரவெடி போல் இருந்தது.
பிக் பாஸ் சீசன் 9
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனில் நந்தினி, பிரவீன் காந்தி, ஆதிரை, அப்சரா, கலையரசன், பிரவீன் ராஜ், துஷார், திவாகர், பிரஜன், வியானா, பார்வதி, கம்ருதீன், சாண்ட்ரா, கானா வினோத், ரம்யா ஜோ, கெமி, கனி, எஃப் ஜே, சுபிக்ஷா, சபரி, விக்கல்ஸ் விக்ரம், அரோரா, திவ்யா கணேஷ் உள்பட மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் திவ்யா, சபரி, விக்ரம், அரோரா ஆகிய நான்கு பேர் பைனலுக்கு தேர்வாகி இருந்தனர்.
பிக் பாஸ் பைனலிஸ்ட்
பிக் பாஸ் சீசன் 9-ல் நான்காவது இடத்தை அரோரா தட்டிச் சென்றார். இதையடுத்து மூன்றாவது இடம் விக்கல் விக்ரமுக்கு சென்றது. பின்னர் இறுதி மேடையில் சபரி மற்றும் திவ்யா கணேஷ் இருந்தனர். அவர்களில் மக்கள் மத்தியில் அதிக வாக்குகளை பெற்ற திவ்யா கணேஷின் கையை தூக்கி வெற்றி பெற்றதாக அறிவித்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இதன்மூலம் பிக் பாஸ் டைட்டில் வென்ற இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளர் என்கிற சாதனையை படைத்தார் திவ்யா. இதற்கு முன்னர் 7-வது சீசனில் அர்ச்சனா டைட்டில் வென்றார்.
டைட்டில் ஜெயித்த திவ்யா கணேஷ்
பிக் பாஸ் சீசன் 9 டைட்டில் வென்ற திவ்யா கணேஷுக்கு டிராபி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி முதலிடம் பிடித்ததற்காக அவருக்கு ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளரும் திவ்யா தான். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. அதன் படி மொத்தம் இருந்த 77 நாட்களுக்கு ரூ.23 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட இந்த பிக் பாஸ் சீசன் மூலம் 73 லட்சத்துக்கு மேல் பணத்தை அள்ளிச் சென்றிருக்கிறார் திவ்யா. அதுமட்டுமின்றி திவ்யாவுக்கு மாருதி விக்டோரிஸ் என்கிற சொகுசு காரும் பரிசாக வழங்கப்பட்டது.
திவ்யா கடந்து வந்த பாதை
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தா திவ்யா. 28வது நாளில் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தார். வந்த முதல் வாரத்திலேயே வீட்டு தலயாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் சாண்ட்ரா உடன் இவர் செய்த அட்ராசிட்டியால் அடுத்த வாரமே பின்னடைவை சந்தித்தார். அதன்பின்னர் சுதாரித்துக் கொண்டு கேம் ஆடினார். டிக்கெட் டூ பினாலேவில் கார் டாஸ்கின் போது பார்வதி மற்றும் கம்ருதீனை தில்லாக எதிர்த்ததால் திவ்யாவுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்து அவரை டைட்டில் வின்னராகவும் மாற்றி இருக்கிறது. இனி சினிமாவிலும் அவர் ஹீரோயினாக ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

