- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- பிக் பாஸ் பைனல்ஸில் பார்வதி - கம்ருதீன்... ஷாக் ஆன சாண்ட்ரா; இன்ப அதிர்ச்சியில் விஜய் சேதுபதி..!
பிக் பாஸ் பைனல்ஸில் பார்வதி - கம்ருதீன்... ஷாக் ஆன சாண்ட்ரா; இன்ப அதிர்ச்சியில் விஜய் சேதுபதி..!
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் பைனல் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இதில் ரெட் கார்டு வாங்கிய கம்ருதீனும் கலந்துகொண்டார். பார்வதி லேட்டாக வந்து இந்த குழுவில் ஐக்கியமானார்.

Kamrudhin Mass Entry in Bigg Boss Finals
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைந்தது. பிக் பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இந்த சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்தவர் தான் கம்ருதீன். விஜய் டிவியின் மகாநதி சீரியலில் நடித்து பிரபலமான கம்புருதீன் இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கினார். இந்த சீசனில் ஆரம்பத்தில் சண்டை போட்டுக் கொண்டே இருந்த கமருதின், ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியின் பேச்சைக் கேட்டு அடங்கியிருந்தார். கம்ருதீன் சைலன்டாக இருந்த சில வாரங்கள் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்தது.
ரெட் கார்டு
அவர் எப்போது பார்வதியுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தாரோ அப்போதிலிருந்து அவரின் கேம் டைவர்ட் ஆக தொடங்கியது என்று தான் சொல்ல வேண்டும். பிரச்சனைகளை உருவாக்குவதே பார்வதியின் வேலையாக இருந்து வந்த நிலையில் அவரின் பிரச்சனைகளுக்கு எல்லாம் சப்போர்ட்டாக நின்று கம்ருதினும் கெட்ட பெயர் வாங்கினார். ஒரு கட்டத்தில் பார்வதியை கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கியதன் பலனாக கம்ருதீனுக்கு ரெட் கார்டும் கிடைத்தது. கார் டாஸ்கின் போது சான்ட்ராவை பார்வதியுடன் சேர்ந்து வெளியே தள்ளி விட்டதற்காக கம்ருதீனுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
கம்ருதீனுக்கு வரவேற்பு
பைனல்ஸ் வரை செல்லும் அளவுக்கு தகுதி உள்ள போட்டியாளராக இருந்த கம்ருதீன் உடனடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வரலாற்றில் ஜோடியாக ரெட் கார்டு வாங்கிய நபர்கள் என்றால் அது பார்வதியும் காமருதினும் தான். ரெட் கார்டு வாங்கி வெளியே சென்றாலும் மக்கள் மத்தியில் கம்ருதீனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் பார்வதிக்கு மக்கள் மத்தியில் சப்போர்ட் கிடைக்கவில்லை. அவரும் வெளியே சென்ற பின்னர் நான் தான் டைட்டில் வின்னர் என்கிற ரேஞ்சுக்கு எடிட் பண்ண வீடியோக்களை ஷேர் செய்து இன்ஸ்டாவில் டிரெயின் விட்டுக் கொண்டிருந்தார்.
மீண்டும் மாஸ் எண்ட்ரி கொடுத்த கம்ருதீன்
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் பைனலுக்கு பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று கம்ருதீன் பிக் பாஸ் பைனலில் கலந்து கொண்டார். அவரை மேடைக்கு விஜய் சேதுபதி அழைத்து பொழுது அரங்கம் அதிர மக்கள் கைதட்டியும் விசில் அடித்தும் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி தாங்கள் பார்வதியையும் அழைத்ததாகவும் அவர் பிஸியாக இருந்ததால் வர முடியவில்லை எனவும் கூறினார். ஆனால் சிறிது நேரத்தில் பார்வதியும் கலந்துகொண்டார். இருவரும் ஜோடியாக பிக் பாஸ் பைனல்ஸ் மேடையில் எடுத்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Paaru and #Kamrudhin on finale da tharkurigala😂🤣😂 🔥🔥🔥 #BiggBossTamil9pic.twitter.com/cbr1yZfo4B
— ꪶꪖꪜꪖꪀꪗꪖ ✍️🌸✿꧂ (@pklavanya_kar) January 18, 2026

