Asianet News TamilAsianet News Tamil

நயன்தாரா பெயரை ஜிபி முத்து சொன்னதும் ஆடிப்போன கமல்... தலைவருக்கு இப்படி ஒரு ஆசை இருக்கா - பிக்பாஸ் புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் ஜிபி முத்து நயன்தாரா பெயரை சொன்னதும் கமல் கொடுத்த ரியாக்‌ஷன் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

First Published Oct 16, 2022, 9:54 AM IST | Last Updated Oct 16, 2022, 9:55 AM IST

பிக்பாஸ் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்டது. முதல் வாரம் என்பதால் இந்த வார இறுதியில் எலிமினேஷன் கிடையாது. இதனால் போட்டியாளர்களுடன் ஜாலியாக கலந்துரையாடினார் கமல். இன்றைய எபிசோடில் ஜிபி முத்துவை கலாய்க்கும் விதமாக அவருக்கு Bigg Boxx என்கிற பெயருடன் கூடிய தபால் பெட்டி ஒன்றை வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார் ஆண்டவர்.

அந்த பெட்டியை திறந்து பார்த்த ஜிபி முத்துவிற்கு முதலில் காத்திருந்த ஆச்சர்யம், அதில் முருங்கைக்காய் இருந்தது. கடந்த வாரம் முருங்கைக்காய் போட்டு சாம்பார் வேண்டும் என பிக்பாஸிடம் கேட்டிருந்தார் ஜிபி முத்து. அதற்காக தபால் பெட்டியில் முருங்கைக் காயை அனுப்பி வைத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் கமல்.

அதேபோல் அதில் வந்திருந்த லெட்டர் ஒன்றில், தலைவரே நீங்கள் நடிக்க விரும்பும் இரண்டு ஹீரோயின்கள் யார் என கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. உடனே நயன்தாரா மற்றும் சிம்ரன் என பதிலளித்தார் முத்து. இதில் அவர் நயன்தாரா பெயரை சொன்னதும் ஷாக் ஆன கமல், அடி சக்க என சொன்னார். பின்னர் வீட்டுக்குள் இருக்கும் நடிகைகளில் யாராவது இரண்டுபேரை ஹீரோயினாக தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கமல் கேட்டதும், ஜிபி முத்து திருதிருவென முழிக்கும் காட்சிகளும் அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

இதையும் படியுங்கள்... முதல் வாரத்திலேயே வைல்டு கார்டு எண்ட்ரி... சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர் யார் தெரியுமா?

Video Top Stories