முதல் வாரத்திலேயே வைல்டு கார்டு எண்ட்ரி... சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர் யார் தெரியுமா?
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்துகொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் வாரமே வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர் எண்ட்ரி கொடுத்துள்ளாராம்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். வழக்கமாக இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் முதல் வாரம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஜாலியாக செல்லும். ஆனால் இந்த சீசனில் முதல் வாரமே போட்டியாளர்கள் முட்டி மோதிக் கொண்டனர்.
கமல்ஹாசன் கூட நேற்றைய எபிசோடில் இதுகுறித்து ஆச்சர்யமாக பேசினார். 40 நாட்களில் நடக்கவேண்டிய விஷயங்கள் எல்லாம் முதல் வாரத்திலேயே நடந்து வருவதாக கூறினார். அதுமட்டுமின்றி இதுவரை நடைபெற்ற சீசன்களிலேயே வேகமாக பிக் அப் ஆன சீசன் இதுதான் எனவும் பாராட்டுக்களை தெரிவித்தார் கமல். இதனால் போட்டியாளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
இதையும் படியுங்கள்... கோலிவுட் டூ பாலிவுட்.. தீபாவளிக்கு திரையரங்குகளில் பட்டாசாய் பட்டைய கிளப்ப காத்திருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் எதுவும் கிடையாது. இதனால் இந்த வாரம் நடந்த நிகழ்வுகள் குறித்தும், டாஸ்க் குறித்து போட்டியாளர்களுடன் ஜாலியாக கலந்துரையாடிய கமல், சிலருக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார். இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு வைல்ட் கார்டு போட்டியாளர் செல்ல உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி பிரபல நகைச்சுவை நடிகையும், தொகுப்பாளினியுமான மைனா நந்தினி தான். இவர் தான் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் வைல்ட் கார்டு போட்டியாளர். இன்றைய எபிசோடில் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரின் சர்ப்ரைஸ் எண்ட்ரிக்கு பின்னர் பிக்பாஸ் வீட்டில் என்னென்ன கலாட்டா நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... உலகின் மிக அழகான 10 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகை தீபிகா படுகோன்! இவரின் ப்ளஸ் எது தெரியுமா?