அலறவிட்ட போட்டியாளர்கள்... கலங்கிய ஜிபி முத்து - முதல் நாளே இப்படியா..! வைரலாகும் புரோமோ வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஜிபி முத்துவிடம் சக போட்டியாளர்கள் கத்தி பயமுறுத்தி அலறவிடும் காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

Share this Video

பிக்பாஸ் 6 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதற்கு முக்கிய காரணம் அதில் போட்டியாளராக பங்கேற்றுள்ள ஜிபி முத்து தான். நேற்று கமல்ஹாசனையே ஒரே ஒரு கேள்வியால் வாயடைக்க செய்த ஜிபி முத்து, இன்றும் வீட்டில் vibe செய்து வருகிறார். தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரோமோவில் தூங்கிக் கொண்டிருக்கும் ஜிபி முத்துவை சக போட்டியாளர்கள் பயமுறுத்தும்படியான காட்சிகளும், அதற்கு அவர் அலறியடித்து ஓடும் படியான காட்சிகளும் இடம்பெற்று உள்ளன.

ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகும் ஜிபி முத்து மழையில் நனைந்தபடி குத்தாட்டம் போட்டு தனது கோபத்தை தனித்துக் கொள்ளும் காட்சிகளும் இந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன. இதைப்பார்த்த ரசிகர்கள் முதல் நாளே இப்படி அலப்பறை பண்றீங்களே தலைவரே என சோசியல் மீடியாவில் நக்கலடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஜிபி முத்து கேட்ட ஒரே ஒரு கேள்வியால் வாயடைத்துப் போன கமல்ஹாசன் - தீயாய் பரவும் வீடியோ இதோ

Related Video