GP Muthu : ஜிபி முத்து கடந்தாண்டு பிக்பாஸ் செட்டின் முன்னர் புகைப்படம் எடுத்து பதிவிட்டதும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் பரவின.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜிபி முத்து. இவர் ஆரம்பத்தில் டிக்டாக் செயலியில் வீடியோ பதிவிட்டு அதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து தனக்கு வரும் கடிதங்களை தனது வட்டார மொழியில் எதார்த்தமாக பேசி யூடியூப்பில் வீடியோ போட்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களையும் கவர்ந்தார். இவரின் வீடியோக்களும் டிரெண்டாகி மிகப்பெரிய அளவில் ரீச் ஆகின.
ஜிபி முத்து கடந்தாண்டு பிக்பாஸ் செட்டின் முன்னர் புகைப்படம் எடுத்து பதிவிட்டதும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் பரவின. பின்னர் அதுவெறும் வதந்தி என தெரியவந்தது. இதையடுத்து இந்த சீசனில் நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என ரசிகர்களும், அவரது குடும்பதினரும் கேட்டுக் கொண்டதை அடுத்து பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் ஜிபி முத்து.
இதையும் படியுங்கள்... ஒருவருடத்தில் கலைந்த திருமண வாழ்க்கை...பிபி 6 விஜே மகேஸ்வரியின் உருக்கமான பதிவு

நேற்று முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தது ஜிபி முத்து தான். அப்போது அவரிடம் பேசிய கமல், யூடியூப்பில் வட்டார மொழியில் திட்டி பேசுவது போல் வீட்டினுள் இருக்க முடியாது என கண்டிஷன் போட்டு வீட்டுக்குள் அனுப்பிவைத்தார். இதன்பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற ஜிபி முத்து அங்கு சிறிது நேரம் தனியாக இருந்தார்.
ரொம்ப நேரமாக அடுத்த போட்டியாளர் வராததால், தனக்கு பயமாக இருப்பதாக கூறி புலம்பினார் ஜிபி முத்து. இதையடுத்து அகம் டிவி வழியே தோன்றிய கமல், அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பேசினார். அப்போது உங்களுக்கே இப்படினா... முதன்முதலில் பிறந்த ஆதாம் ஏவாலுக்கு எப்படி இருந்திருக்கும் என கேட்டார்.
கமலின் பேச்சைக் கேட்டு திரு திருவென முழித்த ஜிபி முத்து, ஆதாமா... அவர் யாரு என கேட்க, இதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் திகைத்துப் போனார் கமல். ஜிபி முத்துவின் இந்த தக் லைஃப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் 6-ல் மேலும் ஒரு போட்டியாளர்... முதல் வாரமே சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுக்க உள்ள பிரபல நடிகை
