- Home
- Cinema
- தொலைக்காட்சி
- விசாலாட்சியை பிரைன் வாஷ் பண்ணும் குணசேகரன்; தேவசகாயத்திற்கு தெரியவரும் உண்மை - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
விசாலாட்சியை பிரைன் வாஷ் பண்ணும் குணசேகரன்; தேவசகாயத்திற்கு தெரியவரும் உண்மை - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்குமாறு விசாலாட்சியிடம் கெஞ்சுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியும், சக்தியும் கொடைக்கானலில் ஜாலியாக ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கி இருப்பது தேவசகாயத்தின் ரெசார்ட் என்பது இருவருக்குமே தெரியாது. அதேபோல் தன்னுடைய வீட்டிற்கு போன் பண்ண வந்திருந்த சக்தி, ஜனனியின் கணவர் என்பது தெரியாமல் அவருக்கு உதவியும் செய்திருக்கிறார் தேவசகாயம். மறுபுறம் வீட்டில் ஜனனிக்கு எதிராக பூஜையை நடத்தி முடித்துள்ள ஆதி குணசேகரன், அடுத்த பிளானை செயல்படுத்த ஆயத்தமாகி வருகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
தாயிடம் கெஞ்சும் கதிர்
வீட்டில் பூஜையை நடத்து முடித்துள்ள குணசேகரன், தன் தம்பிகளுடன் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணும்போது வக்கீல் சொன்னதை அவர்களுக்கு நியாபகப்படுத்துகிறார். தனது ஜாமின் விரைவில் முடிய உள்ளதால் மீண்டும் சிறை செல்ல நேரிடும் என்கிற பயத்தில் தன் தம்பிகளை ஏவிவிட்டு, அந்த கேஸை வாபஸ் பெறச் சொல்லி பேசுகிறார். முதலில் விசாலாட்சியிடம் சென்று பேசும் கதிர், எங்களுக்காக அண்ணனின் கேஸை பற்றி பேசி, ஒரு நல்ல முடிவா எடுங்கம்மா என மண்டியிட்டு கேட்கிறார். இதைப்பார்த்து ரேணுகா மற்றும் நந்தினி ஆகியோர், இவனா இப்படி பேசுறான் என வாயடைத்துப் போய் இருக்கிறார்கள்.
எமோஷனலாக பேசும் ஆதி குணசேகரன்
பின்னர் ஆதி குணசேகரனே தன்னுடைய தாய் விசாலாட்சியை அழைத்து பேசுகிறார். அவரிடம் தான் இந்த வீட்டுக்காக மாடாக உழைத்திருக்கிறேன் என தற்பெருமை பேசி மண்டையைக் கழுவும் குணசேகரன், இந்த வீடு, நான் ஆசையா கட்டி காப்பாத்துன கூடு, இந்த கூட்டை யாரும் பிரிச்சிடக் கூடாது என செண்டிமெண்டாக பேசி அவரை லாக் பண்ணுகிறார். விசாலாட்சியும் அவரின் பேச்சுக்கு மயங்கி, நந்தினி மற்றும் ரேணுகாவிடம் பேசி சமாதானப்படுத்தி கேஸை வாபஸ் வாங்கிவிடுவார் போல தெரிகிறது. ஜனனி வரும் முன்பே இதெல்லாம் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
தேவசகாயத்துக்கு தெரியவரும் உண்மை
மறுபுறம் ஜனனியும், சக்தியும் ஜோடியாக வாக்கிங் செல்லும் போது அவர்களை தேவசகாயத்தின் கார் டிரைவர் டேவிட் பார்த்துவிடுகிறார். அவர் உடனே தேவசகாயத்துக்கு போன் போட்டு, நேத்து நம்ம வீட்டுக்கு போன் பண்ண வந்தவன் தான் ஜனனியோடு புருஷன் சக்தி என்கிற உண்மையை சொல்லிவிடுகிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன அவர், உடனடியாக அவரை கார் எடுத்துக் கொண்டு தன்னுடைய இடத்துக்கு வரச் சொல்கிறார். இதன்பின் என்ன ஆனது? தேவசகாயம் ஜனனியையும் சக்தியையும் கடத்தப்போகிறாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் விரிவாக பார்க்கலாம்.

