MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஷாக்கிங் நியூஸ்! கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய முன்னணி சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!

ஷாக்கிங் நியூஸ்! கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய முன்னணி சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!

Swetha Sends Divorce Notice to Her Husband : நடிகை ஸ்வேதா தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக அவரது கணவர் பரபரப்பு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Mar 19 2026, 09:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Swetha Sends Divorce Notice to Her Husband
Image Credit : jiohotstar

Swetha Sends Divorce Notice to Her Husband

சினிமா உலகில் நட்சத்திரங்களின் வாழ்க்கை எப்போதும் ரசிகர்களின் கவனத்தில் இருக்கும். அதில் திருமணம் மற்றும் விவாகரத்து போன்ற விஷயங்கள் அதிகமாக பேசப்படுகின்றன. பல பிரபல ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், சிலர் காலப்போக்கில் பிரிவைத் தேர்வு செய்து வருகிறார்கள்.

இத்தகைய பிரிவுகளுக்கு முக்கிய காரணங்களாக வேலைப் பிஸி, தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை கூறப்படுகின்றன. சில நேரங்களில் புகழ், அழுத்தம் மற்றும் மீடியா கவனமும் உறவுகளை பாதிக்கக்கூடும்.

சரோகேசி மூலம் குழந்தை? - விமர்சனங்களுக்கு அதிரடி பதில் சொன்ன இந்திரஜா சங்கர்

24
Serial Actress Swetha
Image Credit : vijay tv

Serial Actress Swetha

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல யூடியூப் சேனலுக்கு ஸ்வேதா காதலர் என கூறி ஆதி என்பவர் பேட்டி கொடுத்தார். ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஸ்வேதா தனது இன்ஸ்டாகிரான் பக்கத்தில் பதிவிட்டார். இதனிடையே தற்போது ஆதி, நடிகை ஸ்வேதா தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக பரபரப்பு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியீட்டு இருக்கும் பதிவில், ”வணக்கம்.. என் பெயர் ஆதி நடிகை ஸ்வேதாவின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் நான் அளித்த பேட்டியில், நான் தான் அவர்களின் கணவர் என்பதையும் தெரிவித்திருந்தேன்.

34
Swetha as Tamizhselvi
Image Credit : vijay tv

Swetha as Tamizhselvi

அதற்கு பின்னர், ஸ்வேதா அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "என்னை அவருக்கு தெரியாது; அவர் கூறுவது பொய்; என்று பல குற்றச்சாட்டுகளுடன் பதிவு வெளியிட்டிருந்தார்கள். ஒருவர் தெரியவில்லை என்றால், எப்படி விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப முடியும்? ஆனால் எனக்கு அவர்களிடமிருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீஸிலும் என்னைப் பற்றி பல குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அய்யோ, அதை நினைச்சா…இப்போ வரைக்கும் கஷ்டமா இருக்கு; தான் செய்தது ரொம்ப பெரிய தவறு; மனம் திறந்த கேப்ரியல்லா!

44
Chinna Marumagal Serial Actress Swetha
Image Credit : Google

Chinna Marumagal Serial Actress Swetha

இத்தனை நாட்களாக நான் அமைதியாக இருந்தது - அவர்கள் என் மனைவி என்பதாலும், ஒரு பெண்ணை பொது இடத்தில் அவமதிக்கக் கூடாது என்ற மரியாதையாலும் தான். மேலும் ஒருநாள் அவர்கள் உண்மையை புரிந்து கொண்டு திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடனும் காத்திருந்தேன் “ என்றார். இவரின் பதிவு சமூக வலைதளங்களில் பேச்சு பொருளாக மாறி இருக்கிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்
திருமணம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீனாவுக்கு எதிராக சதி... துரத்தி அடிக்கப்பட்ட விஜயா; அதிர்ச்சியில் முத்து - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
போடி வெளிய... அறிவுக்கரசியை விரட்டும் ஈஸ்வரி; பயந்து நடுங்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்: ரேவதிக்கு 2-வது திருமணமா? சாமுண்டீஸ்வரி நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved