சரோகேசி மூலம் குழந்தை? - விமர்சனங்களுக்கு அதிரடி பதில் சொன்ன இந்திரஜா சங்கர்
Indraja Shankar surrogacy controversy response: நான் குழந்தை பெற்றுக் கொண்டது இயல்பாக நடந்த ஒன்று தான். ஆனால் பலர் அதை சரோகேசி, டெஸ்ட் டியூப் பேபி என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள் என்று இந்திரஜா சங்கர் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

வாடகைக்காய் மூலம் குழந்தையா ? இந்திரஜா பதிலடி
தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் டிவி நிகழ்ச்சி, சினிமா உள்ளிட்டவற்றில் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில், "என்னுடைய திருமணம் நடந்ததிலிருந்து இப்பொழுது வரை பலவிதமான விமர்சனங்களை நான் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நான் குழந்தை பெற்றுக் கொண்டது இயல்பாக நடந்த ஒன்று தான். ஆனால் பலர் அதை சரோகேசி, டெஸ்ட் டியூப் பேபி என்று கூறினார்கள். அதைக் கேட்டு என் மனம் வேதனையடைந்தது. உண்மை தெரியாமல் யாரையும் அப்படி பேசாதீங்க. மார்ச் மாதம் திருமணம் நடைபெற்று எப்படி அதற்குள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் இயற்கையாக நடந்த விஷயம் தான் அது, பல பேருக்கு அது புரியவில்லை. மனசாட்சியே கொஞ்சம் கூட இல்லாமல் ஒரு பெண்ணிடம் வந்து நீ எப்படி கர்ப்பம் ஆனாய் என்று கேட்பது சரியான ஒரு கேள்வியா? அப்படியெல்லாம் என்னிடம் வந்து கேட்டார்கள்.
ரோபோ சங்கர் மகள் இந்திரஜா
ஒரு பெண் கர்ப்பம் அடைவாது பெரிய விஷயம். அது கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம். அந்த நேரத்தில் உடல் ரீதியாகவும் சரி, மனரீதியாகவும் சரி, பெரிய போராட்டமாக தான் இருக்கும். அதனால் அதைப் பற்றி தேவையில்லாமல் விமர்சனம் செய்வது மிகப்பெரிய தவறு.
என்னுடைய கர்ப்ப காலத்தில் பெரிய பிரச்சனை எதுவும் எனக்கு ஏற்படவில்லை. கடைசி நேரத்தில் தான் மருத்துவர்கள் எனக்கு ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். குடும்பத்தில் அனைவரும் மிகவும் பயந்தார்கள். ஆப்ரேஷன் செய்யும் போது நான் மருத்துவரிடம் பேசிக் கொண்டு தான் இருந்தேன்.
இந்திரஜா சங்கர் மகன்
என் மகன் நட்சத்திரன் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். ஆப்ரேஷன் செய்யும் போது எனக்கு எந்த வழியும் தெரியவில்லை. அதற்குப் பிறகு எழுந்து நிற்க சொன்னார்கள் அப்போதுதான் உண்மையாக வலி என்றாலே என்ன என்பது எனக்கு தெரிய வந்தது. அந்த வலி அனைத்தும் குழந்தையின் கையில் வாங்கிய போது மறைந்து விட்டது. கர்ப்ப காலம் முதல் பிரசவம் வரை ஒரு பெண்ணின் உடலில் ஏகப்பட்ட மாற்றங்களும் வலிகளும் நிறைந்து இருக்கும். அதனால் ஒரு பெண் தாயாக மாறும்போது அவளது கடினமான சூழ்நிலையை அனைவரும் புரிந்துகொண்டு மரியாதை கொடுக்க வேண்டும் " என்றார்.
ரோபா சங்கர் மறைந்த பிறகு தனது அப்பாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல விஷயங்களை சாதித்து காண்பிப்பேன் என்று அவரும், தாயும் கூறினார்கள்.
நன்றி: Galatta pink
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.