Asianet News TamilAsianet News Tamil

பேசியே சாவடிக்கிறான் சார்... கமலிடம் complaint பண்ணிய ஜிபி முத்து - கலகலப்பான புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில் எவிக்‌ஷன் இல்லை என்கிற காரணத்தால் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ் உடன் ஜாலியாக உரையாடி மகிழ்ந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் ஆரம்பமாகி ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று ஹவுஸ்மேட்ஸ் உடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், போட்டியாளர்களுக்கு இடையேயான பிரெண்ட்ஷிப் என்ன நிலைமையில் இருக்கு என கேள்வி கேட்டார். இதற்கு முதலில் பதிலளித்த நடிகை மகேஸ்வரி, கதிர் உடனான பிரண்ட்ஷிப் குறித்து பேசினார்.

இதையடுத்து பேசிய அமுதவாணன். ஜிபி முத்து உடனான நட்பு குறித்து பேசினார். தான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தபோது தான் முதல்முறையாக பேசியதாகவும், தற்போது பிரெண்ட்ஷிப்பே வேண்டாம் என சொல்லும் அளவுக்கு அவருடன் நான் ஸ்டாப்பாக பேசி கலாட்டா செய்து வருவதாக அமுதவாணன் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய ஜிபி முத்து, அமுதவாணன் ரொம்ப பாடா படுத்துறான் சார், பேசிய சாவடிக்கிறான் சார் என சொல்ல, கமலும் ஹவுஸ்மேட்ஸும் சிரிக்கின்றனர். இந்த காட்சிகளையெல்லாம் பார்க்கும் போது இன்னைக்கு எபிசோடு, ஜிபி முத்துவின் ஒன் மேன் ஷோவாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஒரே கேள்வியால் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டிவிட்ட கமல்... வைரல் புரோமோ இதோ

Video Top Stories