Asianet News TamilAsianet News Tamil

ஒரே கேள்வியால் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டிவிட்ட கமல்... வைரல் புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டிவிடும் வகையில் கமல் ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.

First Published Oct 16, 2022, 12:37 PM IST | Last Updated Oct 16, 2022, 12:37 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லாவிட்டாலும், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பது மட்டும் தற்போது வெளியாகி உள்ள புரோமோவின் மூலம் உறுதியாக தெரிகிறது. அந்த புரோமோவில், இப்படி ஒரு நபர் இந்த ஷோவில் இல்லாமலேயே இருந்திருக்கலாம் என நீங்கள் மனதில் நினைப்பவர் யார் என சொல்லுமாறு போட்டியாளர்களிடம் கமல் கேள்வி கேட்கிறார்.

இதையடுத்து முதல் ஆளாக எழுந்த அமுதவாணன், விக்ரமனை தேர்வு செய்கிறார். அவர் கரெக்ட் என தெரிஞ்சாலும் மறுபடியும் அதைப்பேசி பெரிதாக்குவதாக கூறினார். இதையடுத்து தனலட்சுமியை தேர்வு செய்யும் ரச்சிதா, அவர் எல்லோருடனும் நேரம் செலவிடுவதில்லை என்றும், அப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறினார்.

பின்னர் வரும் ஜனனி, ஷிவினை தேர்வு செய்து, அவர் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்பது மாதிரி, தன்னை மட்டுமே என்ஜாய்மெண்டாக வைத்திருப்பதாகவும், மற்றவர்களுடன் பெரிதாக உரையாடுவதில்லை எனக் கூறினார். கமலின் இந்த கேள்வியால் நிச்சயம் பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து சண்டை வர வாய்ப்புள்ளது உறுதி என்பது மட்டும் தெரிகிறது.

இதையும் படியுங்கள்... அண்ணாசாலையில் துணிவு பட ஷூட்டிங்... மாஸாக வந்த அஜித்தை பார்க்க அலைமோதிய மக்கள் கூட்டம்

Video Top Stories