பள்ளி மாணவர்களுக்கு தக்காளி பரிசளித்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய தலைமை ஆசிரியர் - எங்கு தெரியுமா?

காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு தக்காளி பரிசளித்துள்ளார் தலைமை ஆசிரியர்.

First Published Jul 16, 2023, 12:03 PM IST | Last Updated Jul 16, 2023, 12:03 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த இராஜாவூர் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.இந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியராக நல்லாசிரியர் விருது பெற்ற இந்திரா பணியாற்றி வருகிறார். ஜூலை 15 (நேற்று) கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121 பிறந்தநாள் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது.

மேலும் தலைமை ஆசிரியர் இந்திரா  காமராஜரின் சிறப்புகளை எடுத்துக் கூறியும் வேற்றுமையை ஒழிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் பிறந்தநாள் விழாவில் தக்காளியின் விலை ஏற்றத்தின் காரணமாக பள்ளி  மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொருவருக்கும் சுமார் 100 கிராம் அளவிலான தக்காளியை பரிசாக வழங்கினர்.

மேலும் தக்காளியின் விலையேற்றத்தின்  காரணமாக நூதனமான முறையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தக்காளியின் விலை ஏற்றத்தை சுட்டு காட்டும் வகையில் இந்த தக்காளி பரிசளிப்பு நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது. தலைமை ஆசிரியரின் இந்த செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.

யார்ரா நீங்க.? விலை உயரும் தக்காளியை பாதுகாக்கும் விஷ பாம்பு - ட்ரெண்டாகும் அதிர்ச்சி வீடியோ

Video Top Stories