யார்ரா நீங்க.? விலை உயரும் தக்காளியை பாதுகாக்கும் விஷ பாம்பு - ட்ரெண்டாகும் அதிர்ச்சி வீடியோ
தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன், கிலோ, 20 ரூபாய்க்கு கிடைத்த தக்காளி, தற்போது, மாம்பழத்தை விட, 150 ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்காலத்தில் தக்காளி எந்த விலையுயர்ந்த பொருட்களுக்கும் குறைந்ததல்ல என்று சொல்லலாம்.
விண்ணை முட்டும் விலையில் தக்காளியை வாங்க முடியாமல் மக்கள் திணறி வரும் நிலையில், சமூக வலைதளங்கள் பலரும் தங்களது விரக்தியை வெளிப்படுத்தும் தளமாக மாறியுள்ளது. அதிகரித்து வரும் விலைகள், இணையத்தில் மீம்ஸ் ஆக பரவி வருகிறது.
ராஜ்யசபா எம்.பி ஆகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - இதை எதிர்பார்க்கவே இல்லையே !
இன்ஸ்டாகிராமில் நபர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஒரு நபர், தக்காளி ஒரு புதையலுக்குக் குறைவானது அல்ல, ஆபத்தான பாம்பு அதைப் பாதுகாக்கிறது என்று குறிப்பிட்டு வைரல் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில், நாகப்பாம்பு தக்காளியின் நடுவில் அமர்ந்து வேடிக்கை பார்க்கிறது.
அங்கிருந்த நபர் ஒருவர் அதைப் பிடிக்க முயன்ற போது, அந்த அரச நாகப்பாம்பு சீறிப்பாய்ந்து நபரைத தாக்கியது. மிகவும் ஆக்ரோஷமாக அந்த பாம்பு காணப்படுகிறது. தக்காளி மிகவும் விலையுயர்ந்த பொருள் என்பதால், பாம்பு அதனை பாதுகாக்கிறது என்ற வாசகத்துடன் பதிவிடப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்