Asianet News TamilAsianet News Tamil

ராஜ்யசபா எம்.பி ஆகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - இதை எதிர்பார்க்கவே இல்லையே !

ராஜஸ்தானில் இருந்து தமிழக தலைவர் அண்ணாமலையை ராஜ்யசபாவுக்கு பாஜக நியமிக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Tamil Nadu BJP leader Annamalai becomes Rajya Sabha MP - BJP sources inform
Author
First Published Jul 15, 2023, 10:47 PM IST

பாரதிய ஜனதா கட்சி (BJP) என்றாலே நிர்வாகிகளை அங்கீகரிக்கும் கட்சியாக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

தனது கட்சியில் இருக்கும் சிறந்த செயல்பாட்டாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் ஆளுநர், மத்திய அமைச்சர் மற்றும் பிற முக்கிய பதவிகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் இல. கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் போன்ற பாஜக கட்சியின் மூத்த தலைவர்களுக்கு ஆளுநர் பதவிகளை வழங்கியது. இந்த நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலை 73 இடங்களைக் கொண்ட ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

தமிழின் பெருமையை காக்க காசி மற்றும் சௌராஷ்டிர தமிழ் சங்கமங்களை ஏற்பாடு செய்து, புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது காவி கட்சி. தி.மு.க.வை எதிர்த்து நிற்க, சிவ பெருமானின் உறைவிடமான ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமநாதபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை களமிறக்க அதன் முக்கியத் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். கர்நாடக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பணியில் இருந்து விலகி காவி கட்சியில் சேர்ந்தார்.

அவர் தமிழகத்தில் கட்சியின் மாநிலத் தலைவராக ஆனதில் இருந்து, பாஜக மேலும் தீவிரமடைந்து, பல மக்கள் சார்ந்த பிரச்சினைகளை எழுப்பி, கட்சியை ஒரு துடிப்பான அமைப்பாக மாற்றியது என்றே சொல்லலாம். அடுத்த வாரம் தென்னாப்பிரிக்காவின் பிரிக்ஸ் மாநாட்டில் நடைபெறும் கொள்கை விவாதத்தில் பங்கேற்கும் நான்கு பேர் கொண்ட பாஜக பிரதிநிதிகளில் ஒருவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம்பெற்றுள்ளார்.

லண்டனில் தேசிய பாஜக ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிலும் அவர் பேச்சாளராக இருந்தார். ஜூலை 28 முதல் தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரையை மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ‘பாத யாத்திரை’யை தொடங்கி வைக்கிறார்.

தற்போது அரசியல் வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்த போது, “அண்ணாமலை ராஜ்யசபாவுக்கு முன்மொழியப்பட்டால், அது மாநிலத்தில் பா.ஜ.க.வின் வாய்ப்புக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும். பாஜக கட்சி இதுபற்றி ஆலோசனையில் இருக்கிறது” என்று தெரிவித்தனர். 2024 லோக்சபா தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், மாநிலத்திற்காக பணியாற்றுவதில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகவும் அண்ணாமலை முன்பு கூறியிருந்தார்.

இந்த ஆண்டு மே மாதம் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆட்சி மாற்றத்துக்காக இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகம் வந்ததாக கூறினார். “2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. 2024 தேர்தலில் கோவை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் போட்டியிட பல திறமையான தலைவர்கள் கட்சியில் உள்ளனர். ஒரு மாநிலத் தலைவராக, எங்கள் வேட்பாளர்கள் இங்கு நடைபெறும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதே எனது பணி.

ஒரு காரியகர்த்தா என்ற முறையில், 2024 தேர்தலில் ஒரு கேடராக பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று டெல்லிக்கும் (கட்சி தலைமை அலுவலகம்) தெரிவித்துள்ளேன்," என்று அவர் கூறினார். இந்த நிலையில் அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்குமா? என்றும், அதுமட்டுமின்றி தமிழக பாஜகவில் சுறுசுறுப்பாக இயங்கிவரும் அண்ணாமலைக்கு மாற்றாக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.

ஒரு நாள் போதும் முதல்வரே.. முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்.! இதை எதிர்பார்க்கல !!

Follow Us:
Download App:
  • android
  • ios