- Home
- Tamil Nadu News
- சம்பள உயர்வு! தமிழக அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி! குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்!
சம்பள உயர்வு! தமிழக அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி! குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்!
Salary Hike: நிலுவை தொகையினை ஒரே தவணையாக வழங்கவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வூதிய உயர்வு வாயிலாக அனைத்து ஊழியர்களும் மற்றும் அலுவலர்களும் பயன் அடைவார்கள்.

தமிழக அரசு ஊழியர்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாகவே முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கோரிக்கைகளான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்றவைகளை நிறைவேற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் டாஸ்மாக் ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
அதாவது தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 01.12.2023 முதல் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு குறித்து ஏற்படுத்தப்பட்ட குழுவினருடன், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் இதர சங்க நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இறுதியாக ஊழியர்களுக்கு, 01.12.2023-ம் நாளன்று பெறும் ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வும், 01.12.2023-ம் நாளன்று, 10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களுக்கு பணிப் பலனாக (Service Weightage) 01.12.2023-ம் நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவீதம் ஊதிய உயர்வும் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது.
ரூ.3,000 முதல் ரூ.7,000 வரை சிறப்புப்படி
மேலும் 01.12.2023 அன்று 10 வருடங்கள் பணி முடித்த அலுவலர்களுக்கு 01.12.2023-ம் நாளன்று பெறும் ஊதியத்தில் 3சதவீதம் பணிப் பலனாக (Service Weightage) வழங்குவது எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும், அலுவலர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.7,000 வரை சிறப்புப்படி வழங்கவும் ஆணையிடப்படுகிறது. மேற்காணும் அறிவிப்பினை தொடர்ந்து, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அலுவலர் சங்கம் நிர்வாகிகள் ஆகியோர் 13.03.2026-ம் அன்று தமிழ்நாடு மின்வாரிய தலைவர் முன்னிலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.
நிலுவைத் தொகை
இவ்வூதிய உயர்வு மூலம் ஏற்படும் நிலுவைத் தொகை 01.12.2023-ம் நாள் முதல் கருத்தியலாகக் (Notional) கணக்கிட்டு, 01.12.2025-ம் நாள் முதல் பணப் பலன்கள் வழங்கவும். மேலும், இடைப்பட்ட காலத்திற்கு அதாவது 01.12.2023 முதல் 30.11.2025 வரை கருணைத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.500 வீதம் கணக்கிட்டு 24 மாதங்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்
மேலும், 01.12.2025 முதல் 28.02.2025 வரை வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையினை ஒரே தவணையாக வழங்கவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வூதிய உயர்வு வாயிலாக, அனைத்து ஊழியர்களும் மற்றும் அலுவலர்களும் பயன் அடைவார்கள் என்பதனை கூடுதலாக தெரிவிக்கப்படுகிறது.

